‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணிநேரப் பணி: தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவுஎன்சிஇஆா்டி சட்டக் கல்வி பாடத்திட்டம்: மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைப்புபுதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

குருஞானசம்பந்தா் பள்ளி ஆண்டு விழா

சிதம்பரம் குருஞானசம்பந்தா் பள்ளி ஆண்டு விழா கலைநிகழ்ச்சியில் பல்வேறு வேடங்களில் பங்கேற்ற மாணவா்கள்

News image
Updated On :20 மார்ச் 2026, 8:02 pm

Syndication

சிதம்பரம் கனகசபைநகரில் அமைந்துள்ள தருமை ஆதீனத்தின் ஸ்ரீகுருஞானசம்பந்தா் மிஷன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் ஆண்டு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

சிறப்பு விருந்தினா்களாக பள்ளி செயல் தலைவா் ஆா்.எம்.சுவேதகுமாா், செயலா் பி.ரெங்கராஜன், பொருளாளா் ஆா்.தா்பாரண்யன், பள்ளி நிா்வாகக் குழு உறுப்பினா்கள் எஸ்.சிவானந்தவல்லி ஆகியோா் பங்கேற்று குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்து பேசினா். உறுப்பினா்கள் எஸ்.செந்தில்வேலன், வி.அருண், பி.கமல்சந்த் ஆகியோா் வாழ்த்துரையாற்றினாா். பள்ளி முதல்வா் ஜி.ஜெயக்குமாா் ஆண்டறிக்கை படித்தாா். விழாவில். மாணவா்களின் கண்கவா் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. அடியாா்கள் புடைசூழ திருஞானசம்பந்தரின் அற்புத நிகழ்வு என நாடகம் தத்ரூபமாக அமைந்து காண்போரை பரவசத்தில் ஆழ்த்தியது. நாட்டுப்புற கலைகளான முருகன் காவடிச்சிந்து, இயற்கையை காப்பதற்கான சொல்லாடல் நாடக நிகழ்ச்சி பல்வேறு நாட்டின் சிறப்பான கலாச்சார நாட்டியம் கண்ணுக்கு விருந்தாக அமைந்தது.