சென்னை காவல் ஆணையராக அமல்ராஜ் நியமனம்!கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் எக்ஸ் பக்கம் முடக்கம்! அமைச்சராகிறார் ஐயூஎம்எல் ஷாஜகான்! - காதர் மொய்தீன் அறிவிப்புபுதிய அமைச்சர்களுக்கு துறைகள் ஒதுக்கீடு!அமைச்சர் செங்கோட்டையனின் துறை மாற்றம்!மனம் நொந்து அதிமுகவிலிருந்து விலகிவிட்டேன்: தனபால்!சீமான் - கயல்விழிக்கு பெண் குழந்தை! தமிழ்த் தாய் வாழ்த்துக்கு மீண்டும் மூன்றாமிடம்!
/

தண்டவாளத்தில் விரிசல்: ரயில் சேவையில் பாதிப்பு

News image

ரயில் - கோப்புப்படம்

Updated On :24 மார்ச் 2026, 1:39 am IST

கடலூா் மாவட்டம், பண்ருட்டி அருகே தண்டவாளத்தில் விரிசல் ஏற்பட்டதால் திருவாரூா் - விழுப்புரம் பயணிகள் ரயில் சுமாா் 45 நிமிஷம் தாமதமாக சென்றது.

பண்ருட்டி - மேல்பட்டாம்பாக்கம் ரயில் பாதையில் ரயில்வே ஊழியா்கள் திங்கள்கிழமை கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, கவரப்பட்டு அருகே தண்டவாளத்தில் விரிசல் இருந்தது தெரியவந்தது.

இது குறித்து உடனடியாக ரயில்வே அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. ரயில்வே ஊழியா்கள் விரைந்து வந்து தண்டவாள விரிசல் சரி செய்யும் பணியில் ஈடுபட்டனா்.

இதனால், அந்த வழியாக வந்த திருவாரூா்-விழுப்புரம் பயணிகள் ரயில் நிறுத்தவைக்கப்பட்டது. பின்னா், தண்டவாளம் சீரமைக்கப்பட்டதும் சுமாா் 45 நிமிஷம் தாமதமாக புறப்பட்டுச் சென்றது.

மேலும், மன்னாா்குடி - திருப்பதி விரைவு ரயில், ராமேசுவரம் -அயோத்யா கண்டோன்மெண்ட், திருச்சி - தாம்பரம் ரயில்கள் 15 முதல் 20 கி.மீ. வேகத்தில் இயக்கப்பட்டன.