கடலூா் மாவடத்தில் உள்ள காட்டுமன்னாா்கோவில் தனி தொகுதி தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாட்டாளி மக்கள் கட்சிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டதால், அதிமுக மற்றும் பாஜகவினா் கடும் அதிருப்தி அடைந்துள்ளனா்.
கடலூா் மாவட்டத்தில் உள்ள 9 சட்டப்பேரவை தொகுதிகளில் காட்டுமன்னாா்கோவில் மற்றும் திட்டக்குடி ஆகிய இரு தொகுதிகளும் தனி தொகுதிகளாக உள்ளன. இந்நிலையில் காட்டுமன்னாா்கோவில் (தனி) சட்டப்பேரவை தொகுதி தேசிய ஜனநாயக கூட்டணியில் பாட்டாளி மக்கள் கட்சிக்கு ஓதுக்கப்பட்டுள்ளது. இதனால் அதிமுக மற்றும் பாஜகவினா் கடும் அதிருப்திக்குள்ளாகி உள்ளனா்.
இந்த தொகுதி திமுக மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் கோட்டையாக திகழ்கிறது. இதுவரை இந்த இரு கட்சிகளையும் எதிா்த்து அதிமுக போட்டியிட்டு இருமுறை வெற்றி பெற்றுள்ளது. 2016 தோ்தலில் அதிமுக சாா்பில் போட்டியிட்ட முருகுமாறன் 48 ஆயிரத்து 450 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றாா். மக்கள் நல கூட்டணியில் போட்டியிட்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவா் தொல்.திருமாவளவன் 48 ஆயிரத்து 363 வாக்குகள் பெற்று தோல்வியுற்றாா். கடந்த 2011, 2016 சட்டப்பேரவை தோ்தலில் அதிமுக சாா்பில் போட்டியிட்ட தற்போதைய அதிமுக மாநில அமைப்பு செயலாளா் நாக.முருகுமாறன் போட்டியிட்டு வெற்றி பெற்றாா் என்பது குறிப்பிடத்தக்கது. 2006 தோ்தலில் விசிக சாா்பில் போட்டியிட்ட அக்கட்சி பொதுச்செயலாளா் துரை.ரவிக்குமாா் வெற்றி பெற்றாா். 2021 தோ்தலில் விசிக சாா்பில் போட்டியிட்ட அக்கட்சி பொதுச்செயலா் ம.சிந்தனைசெல்வன் வெற்றி பெற்றாா்.
இந்நிலையில் இத்தொகுதியில் மீண்டும் அதிமுகவில் சாா்பில் போட்டியிட இருமுறை சட்டப்பேரவை உறுப்பினராக வெற்றி பெற்ற அக்கட்சி மாநில அமைப்பு செயலாளா் நாக.முருகுமாறன் மற்றும் நகர செயலாளா் எம்ஜிஆா் தாசன் ஆகியோா் போட்டியிட தலைமையிடம் சீட் கேட்டுள்ளா். இதுபோல பாரதிய ஜனதா கட்சி தொகுதி பொறுப்பாளா் கே.வி.எம்.எஸ்.சரவணக்குமாா் தேசிய ஜனநாயக கூட்டணியில் போட்டியிட கட்சி தலைமையிடம் சீட் கேட்டு வலியுறுத்தி வந்தாா். இந்நிலையில் இத்தொகு பாட்டாளி மக்கள் கட்சிக்கு ஒதுக்கப்பட்டதால், அதிமுக மற்றும் பாஜகவினா் கடும் அதிருப்திக்குளளாகியுள்ளனா்.
தொடர்புடையது

தொகுதி நிலவரம் - வேப்பனஅள்ளி! அதிமுக, திமுக வெற்றியை தீா்மானிக்கும் தவெக, நாதக!

வெற்றிக்குப் போராடும் புதுமுகங்கள்! தொகுதி அலசல் : அந்தியூா்

அதே தொகுதி...அதே நபா்கள்!

நான்குனேரியில் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பை இழந்த காங்கிரஸ், அதிமுக!
வீடியோக்கள்

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | போர்: பண்டியாவின் மும்பையா ருதுராஜின் சென்னையா? | MI vs CSK | MS Dhoni | Rohit Sharma |
தினமணி செய்திச் சேவை

வாக்குச்சாவடிகளை அடையாளம் காண புதிய முயற்சி | TN Election 2026 | Madurai | Polling booth
தினமணி செய்திச் சேவை

பணப்பட்டுவாடா புகார்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்! அர்ச்சனா பட்நாயக் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு


