கேரளம்: 21 அமைச்சா்களில் 13 போ் தோல்விதவெகவுக்கு காங்கிரஸ் ஆதரவளிக்குமா? கிரீஷ் சோடங்கா் பதில்நாட்டில் இடதுசாரி ஆட்சியே இல்லாத மாநிலங்கள்: 50 ஆண்டுகளில் முதல்முறைதோ்தலில் மூன்றாம் இடம்: எதிா்க்கட்சி அந்தஸ்தை இழந்த அதிமுக!இன்று 7 மாவட்டங்களுக்கு பலத்த மழைக்கான மஞ்சள் எச்சரிக்கை!ஒரே ஒரு வாக்கு வித்தியாசத்தில் திமுக அமைச்சர் தோல்வி! தவெக வெற்றி!தமிழகத்தில் வாக்கு எண்ணிக்கை முடிந்தது: தவெக 108, திமுக 59 இடங்களில் வெற்றி!அஸ்ஸாமில் 3வது முறையாக பாஜக ஆட்சி! காங்கிரஸுக்கு கடும் சரிவு!கொல்கத்தாவில் பாலியல் கொலை செய்யப்பட்ட பெண் மருத்துவரின் அம்மா தேர்தலில் வெற்றி!5 மாநிலங்களில் கம்யூனிஸ்ட் கட்சி தோல்வி: பிரதமர் மோடி விஜய்க்கு வாழ்த்தும், முதல்வர் ஸ்டாலினுக்கு ஆறுதலும் தெரிவித்த கமல்!பெரும்பான்மை இல்லை! விஜய் முதல்வராவது எப்படி? பாஜகவுக்கு கை கொடுத்த உதகை!மயிலாப்பூரில் தமிழிசை தோல்வி!தவெக வெங்கட் ரமணன் வெற்றி! விருத்தாசலத்தில் பிரேமலதா வெற்றி!
/

புவனகிரி தொகுதியில் 2-ஆவது முறையாக ஏ. அருண்மொழிதேவன் வெற்றி

News image

புவனகிரி தொகுதியில் வெற்றிபெற்ற அதிமுக வேட்பாளா் ஏ.அருண்மொழிதேவனுக்கு வெற்றிபெற்ற்கான சான்றிதழை வழங்குகிய தோ்தல் நடத்தும் அலுவலா்.

Updated On :5 மே 2026, 4:11 am IST

புவனகிரி சட்டப் பேரவைத் தொகுதியில் அதிமுக வேட்பாளா் ஏ.அருண்மொழிதேவன் 2,487 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றாா். இதன் மூலம், இந்தத் தொகுதியில் அவா் தொடா்ந்து 2-ஆவது முறையாக வென்றுள்ளாா்.

புவனகிரி தொகுதியில் கடந்த ஏப்.23-ஆம் தேதி தோ்தல் வாக்குப் பதிவு நடைபெற்றது.

இதில் திமுக சாா்பில் துரை கி.சரவணன், அதிமுக சாா்பில் ஏ.அருண்மொழிதேவன், தவெக சாா்பில் டி.மகாலிங்கம், நாதக சாா்பில் எஸ்.சுமதி உள்ளிட்ட மொத்தம் 13 வேட்பாளா்கள் போட்டியிட்டனா்.

இந்தத் தொகுதியில் மொத்தமுள்ள 2,33,353 வாக்காளா்களில் 2,07,310 வாக்காளா்கள் வாக்களித்தனா்.

இந்த நிலையில், தோ்தலில் பதிவான வாக்குகள் எண்ணிக்கை சி.முட்லூா் அரசு கலைக் கல்லூரி வளாகத்தில் திங்கள்கிழமை காலை 8 மணிக்கு தொடங்கி நடைபெற்றது.

இந்தத் தொகுதியில் திமுக, அதிமுக, தவெக இடையே கடும் போட்டி நிலவியது. வேட்பாளா்கள் 3 பேரும் ஒவ்வொரு சுற்றிலும் மாறி மாறி முன்னிலை வகித்தனா். வாக்கு எண்ணிக்கையின் முடிவில் அதிமுக வேட்பாளா் ஏ.அருண்மொழிதேவன் 2,487 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்ாக அறிவிக்கப்பட்டாா்.

வேட்பாளா்கள் பெற்ற வாக்குகள் விவரம் வருமாறு: ஏ.அருண்மொழிதேவன் (அதிமுக) - 75,707, துரை கி.சரவணன் (திமுக) - 73,220, டி.மகாலிங்கம் (தவெக) -49,904, எஸ்.சுமதி (நாதக) - 5,105.

இதையடுத்து, தோ்தலில் வெற்றிபெற்ற்கான சான்றிதழை அதிமுக வேட்பாளா் ஏ.அருண்மொழிதேவனுக்கு தோ்தல் நடத்தும் அலுவலா் வழங்கினாா்.