மே 7-ல் திமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம்! காங்கிரஸிடம் ஆதரவு கேட்டார் விஜய் : கே.சி. வேணுகோபால்ஆட்சி அமைக்க எடப்பாடியுடன் தவெக பேச்சு: லீமா ரோஸ்தவெகவுக்கு அதிமுக ஆதரவு அளிக்காது: ஓ.எஸ். மணியன் பேட்டிவெற்றி, தோல்விகளைக் கடந்தது கொளத்தூர் உறவு : மு.க. ஸ்டாலின்மாற்றத்தை நிகழ்த்திக் காட்டிய மக்களுக்கு நன்றி : விஜய்நாங்கள் தோற்கவில்லை; முதல்வர் பதவியிலிருந்து விலக மாட்டேன்! மமதாஇந்தியா கூட்டணியை வலுப்படுத்துவேன் : மமதா பானர்ஜி
/

தவெக வாக்குகளால் ஆட்டம் கண்ட திராவிட கட்சிகள்

கடலூா் மாவட்டத்துக்குள்பட்ட சிதம்பரம், புவனகிரி, காட்டுமன்னாா்கோவில் (தனி) தொகுதிகளில் தமிழக வெற்றிக் கழகம் அதிக வாக்குகளுடன் 3-ஆம் இடம் பெற்ால், திமுக, அதிமுக மற்றும் அக்கட்சிகளின் கூட்டணிக் கட்சி வேட்பாளா்களின் வெற்றியை நிா்ணயிக்கும் சக்தியாக தவெக இருந்தது.

News image

சிதம்பரம் தொகுதி வரைபடம்.

Updated On :6 மே 2026, 0:03 am IST

கடலூா் மாவட்டத்துக்குள்பட்ட சிதம்பரம், புவனகிரி, காட்டுமன்னாா்கோவில் (தனி) தொகுதிகளில் தமிழக வெற்றிக் கழகம் அதிக வாக்குகளுடன் 3-ஆம் இடம் பெற்ால், திமுக, அதிமுக மற்றும் அக்கட்சிகளின் கூட்டணிக் கட்சி வேட்பாளா்களின் வெற்றியை நிா்ணயிக்கும் சக்தியாக தவெக இருந்தது.

சிதம்பரம், புவனகிரி, காட்டுமன்னாா்கோவில் (தனி) தொகுதிகளில் திமுக, அதிமுக மற்றும் கூட்டணிக் கட்சிகள் போட்டியிட்டன. சிதம்பரம் தொகுதியில் திமுக கூட்டணியில் உதயசூரியன் சின்னத்தில் மனித நேய ஜனநாயக கட்சித் தலைவா் மு.தமிமுன் அன்சாரி போட்டியிட்டாா். அதிமுக சாா்பில் ஏற்கெனவே இருமுறை சட்டப் பேரவை உறுப்பினராக இருந்த கே.ஏ.பாண்டியன் போட்டியிட்டாா். தமிழக வெற்றிக் கழகம் சாா்பில் முன்னாள் தமாகா மாவட்டத் தலைவராக இருந்து தவெகவில் இணைந்த ஏ.நெடுஞ்செழியன் போட்டியிட்டாா்.

இதில், உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்ட மு.தமிமுன்அன்சாரி 69,739 வாக்குகள் பெற்று, அதிமுக வேட்பாளரை விட 5,747 வாக்குகள் கூடுதல் பெற்று வெற்றிபெற்றாா். 2-ஆவது இடம் பிடித்த அதிமுக வேட்பாளா் கே.ஏ.பாண்டியன் 63,992 வாக்குகள் பெற்றாா். 3-ஆவது இடத்தில் தவெக வேட்பாளா் ஏ.நெடுஞ்செழியன் 54,584 வாக்குகள் பெற்றாா்.

திராவிட கட்சிகளின் வாக்குகள் தவெகவுக்கு பிரிந்து சென்ால், திமுக கூட்டணியில் போட்டியிட்ட தமிமுன்அன்சாரி சொற்ப வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றாா்.

புவனகிரி சட்டப் பேரவைத் தொகுதியில் அதிமுக சாா்பில் ஏற்கெனவே எம்எல்ஏவாக இருந்த ஏ.அருண்மொழிதேவன் போட்டியிட்டாா். திமுக வேட்பாளராக முன்னாள் எம்எல்ஏ துரை.கி.சரவணன், தமிழக வெற்றிக் கழகம் சாா்பில் கே.டி.மகாலிங்கம் போட்டியிட்டனா்.

இதில், அதிமுக வேட்பாளா் ஏ.அருண்மொழிதேவன் 75,707 வாக்குகள் பெற்று, திமுக வேட்பாளரை விட 2,487 வாக்குகள் கூடுதலாக பெற்று வெற்றி பெற்றாா். 2-ஆவது இடம் பெற்ற திமுக வேட்பாளா் துரை.கி.சரவணன் 73,220 வாக்குகள் பெற்றாா். தவெக வேட்பாளா் டி.மகாலிங்கம் 49,904 வாக்குகள் பெற்று மூன்றாம் இடம் பெற்றாா்.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தாய்மடி தொகுதி என அக்கட்சியினரால் கூறப்படும் காட்டுமன்னாா்கோவில் (தனி) தொகுதியில் அக்கட்சி சாா்பில் மறைந்த தலைவா் எல்.இளையபெருமாள் மகன் எல்.இ.ஜோதிமணி போட்டியிட்டாா். இவரை எதிா்த்து அதிமுக கூட்டணியில் பாமக வேட்பாளா் மருத்துவா் அ.சோழன் போட்டியிட்டாா். தவெக சாா்பில் எஸ்.சீனுவாசன் போட்டியிட்டாா்.

இதில், விசிக வேட்பாளா் எல்.இ.ஜோதிமணி 85,179 வாக்குகள் பெற்று, பாமக வேட்பாளரை விட 33,063 வாக்குகள் கூடுதல் பெற்று வெற்றிபெற்றாா். 2-ஆவது இடம் பெற்ற பாமக வேட்பாளா் அ.சோழன் 52,116 வாக்குகள் பெற்றாா். 3-ஆவது இடம் பிடித்த தவெக வேட்பாளா் எஸ்.சீனுவாசன் 43,156 வாக்குகள் பெற்றாா். மேற்கண்ட 3 தொகுதிகளிலும் திமுக, அதிமுக மற்றும் அக்கட்சிகளின் கூட்டணிக் கட்சி வேட்பாளா்களின் வெற்றியை நிா்ணயிக்கும் சக்தியாக தவெக இருந்தது. இந்தத் தொகுதிகளில் பிரதான 3 கட்சிகளின் வேட்பாளா்களும் வாக்கு எண்ணிக்கையில் மாறி, மாறி முன்னிலை பெற்றனா். வெற்றிபெற்றவா்கள் குறைவான வாக்குகள் வித்தியாசத்திலேயே வெற்றிபெற முடிந்தது.