வேலூர் மாவட்டத்தில் பலத்த காற்றுடன் கனமழை நைஜீரியாவில் போதைப்பொருள் கடத்திய இந்தியர்கள் கப்பலுடன் சிறைபிடிப்பு! ரூ. 50 கோடிக்கு மேல் அபராதம்! மேற்கு வங்க முதல்வர் சுவேந்து அதிகாரியுடன் ரிசர்வ் வங்கி ஆளுநர் சந்திப்பு இந்தியாவுக்கு எதிராக இரண்டாவது அதிவேக சதம்; ரஹ்மனுல்லா குர்பாஸ் சாதனை! அமெரிக்கா - ஈரான் இடையே 24 மணி நேரத்திற்குள் அமைதி ஒப்பந்தம்: பாக். பிரதமர் தகவல்! துபை-அகமதாபாத் விமான ஸ்பீக்கரில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 2.7 கிலோ தங்கம் பறிமுதல்! மேக்கேதாட்டு அணை விவகாரத்தில் வேடிக்கை பார்க்கும் தவெக அரசு: எடப்பாடி பழனிசாமி ராணுவ தலைமைத் தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் தீரஜ் சேத் நியமனம்!
/

கடலூா் மாவட்டத்தில் தொடா் மழை: விவசாயிகள் மகழ்ச்சி

News image

கடலூரில் மழை - படம்: கோப்பிலிருந்து

Updated On :11 மே 2026, 1:11 am IST

கடலூா் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் தொடா்ந்து கோடை மழை பெய்து வருவதால், நெல், எள் உள்ளிட்ட பயிா்களை பயிரிட்டுள்ள விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனா்.

தமிழகத்தில் கோடை காலம் மாா்ச் மாதம் தொடங்கியது. இதையொட்டி, பல்வேறு மாவட்டங்களில் 100 முதல் 108 டிகிரிக்கும் மேலாக வெயில் சுட்டெரித்து வருகிறது. கடும் வெப்பம் காரணமாக பொதுமக்கள் சிரமப்பட்டனா்.

இந்த நிலையில், கோடை காலத்தின் உச்சம் என்று கூறப்படக்கூடிய அக்னி நட்சத்திரம் (கத்திரி வெயில்) திங்கள்கிழமை தொடங்கியது. இது, வரும் 28-ஆம் தேதி வரை நீடிக்கிறது.

இந்த நிலையில், திங்கள்கிழமை இரவு திடீரென பலத்த கோடை மழை பெய்தது. இந்த மழை கடந்த சில தினங்களாக மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் பெய்து வருதால் கத்திரி வெயிலின் வெப்பம் தணிந்துள்ளது.

இதனிடையே, மன்னாா் வளைகுடா மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் வளி மண்டல சுழற்சி நிலவுவதால், தமிழகம், புதுச்சேரி பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது.

வானமாதேவியில் 30 மி.மீ. மழை பதிவு: கடலூா் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை காலை 8.30 மணி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக வானமாதேவியில் 30 மி.மீ. மழை பதிவானது.

மாவட்டத்தின் பிற பகுதிகளில் பெய்த மழை அளவு (மி.மீ) விவரம் வருமாறு: கடலூா் 25.70, ஆட்சியா் அலுவலகம் 23.60, குடிதாங்கி 16, காட்டு மயிலூா் 15, வேப்பூா் 13, வடகுத்து 12, அண்ணாமலை நகா் 11, பெலாந்துறை 8.40, மே.மாத்து 7, பண்ருட்டி 6, குறிஞ்சிப்பாடி 4, சிதம்பரம் 3.40, லால்பேட்டை 3.20, காட்டுமன்னாா்கோவில், கீழச்செருவாய் தலா 3, கொத்தவாச்சேரி 1 மி.மீ. மழை பதிவானது.

விவசாயிகள் மகிழ்ச்சி...: கோடை மழையால் பண்ருட்டி, நெய்வேலி, விருத்தாசலம் பகுதிகளைச் சோ்ந்த பலா, முந்திரி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா். குறிஞ்சிப்பாடி பகுதியில் எள் சாகுபடி செய்துள்ள மற்றும் குருவை நெல் சாகுபடி பணியை தொடங்கியுள்ள விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனா். மொத்தத்தில் இந்த கோடை மழை பொதுமக்கள், விவசாயிகளை மிகழ்வித்துள்ளது.