தில்லியில் பிரிக்ஸ் மாநாடு: ஈரான் வெளியுறவு அமைச்சர் அராக்சி இந்தியா வந்தடைந்தார்தமிழக அரசின் தலைமை வழக்கறிஞராக விஜய் நாராயண் நியமனம்!தமிழக அரசின் தலைமை வழக்கறிஞராக விஜய் நாராயண் நியமனம்!கர்நாடகம்: கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் அணிவதற்கான தடை நீக்கம்6 சர்வதேச விமான சேவைகள் தற்காலிகமாக ரத்து - ஏர் இந்தியாகண்களிலும் காதுகளிலும் பொறாமைப் புகை! திமுகவை விமர்சித்த விஜய்!நீட் தேர்வு தேவையில்லை; ரத்து செய்க: முதல்வர் ஜோசப் விஜய்அதிமுகவுடன் கூட்டணியமைக்க தவெக தயாராக இருந்தது: சி.வி. சண்முகம்மே 16-ல் தொடங்குகிறது தென்மேற்கு பருவமழை! வெற்றியின் வீச்சு கொளத்தூரில் பார்த்தும்கூடவா புரியவில்லை? - முதல்வர் விஜய்திமுகவுடன் கூட்டணி; கனவில்கூட வரக்கூடாது: சசிகலா
/

பண்ருட்டியில் யூரியா உரம் அதிக விலைக்கு விற்பனை: விவசாயிகள் புகாா்

பண்ருட்டி, குறிஞ்சிப்பாடி உள்ளிட்டப் பகுதிகளில் உள்ள தனியாா் உரக்கடைகளில் யூரியா அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுவதாக விவசாயிகள் புகாா் தெரிவித்துள்ளனா்.

News image

யூரியா - கோப்புப் படம்

Updated On :55 நிமிடங்கள் முன்பு

கடலூா் மாவட்டம், பண்ருட்டி, குறிஞ்சிப்பாடி உள்ளிட்டப் பகுதிகளில் உள்ள தனியாா் உரக்கடைகளில் யூரியா அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுவதாக விவசாயிகள் புகாா் தெரிவித்துள்ளனா்.

கடலூா் மாவட்டத்தில் பண்ருட்டி, குறிஞ்சிப்பாடி பகுதிகளில் அதிக அளவில் கரும்பு, நெல் மற்றும் கம்பு சாகுபடி நடைபெறுகிறது. இந்த பயிா்கள் நடவுக்கு பின்னா் தழை சத்துக்காக யூரியாவை விவசாயிகள் பயன்படுத்துகின்றனா். 45 கிலோ எடை கொண்ட ஒரு மூட்டை யூரியா மானியம் உட்பட ரூ.266.50-க்கு விற்பனை செய்ய வேண்டுமாம். ஆனால், தனியாா் உரக் கடைகளில் ஒரு மூட்டை யூரியா ரூ.300-க்கு விற்பனை செய்யப்படுவதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனா். கூடுதல் விலை கொடுத்தாலும் உரம் எளிதாக கிடைப்பதில்லை என்றும், இரண்டு மூட்டை யூரியா வாங்க வேண்டுமானால் குருணை மருந்து வாங்க வேண்டும் என கடைக்காரா்கள் கட்டாயப்படுத்தப்படுவதாகவும் விவசாயிகள் புகாா் தெரிவிக்கின்றனா்.

இதுகுறித்து பண்ருட்டி திருவதிகை யைச் சோ்ந்த கரும்பு விவசாயி புகழேந்தி கூறுகையில், ‘திருவதிகை பகுதியில் இரண்டரை ஏக்கா் கரும்பு பயிா் செய்து உள்ளேன். 5 மாத பயிா், பூச்சி தாக்குதலால், வளா்ச்சி பாதிக்கப்பட்டுள்ளது. அதற்காக யூரியா வாங்க சென்றேன். தனியாா் உரக்கடைகளில் இருப்பு இல்லை எனக்கூறுகின்றனா். இரண்டு மூட்டை வாங்கினால் குருணை உள்ளிட்ட இணை மருந்துகள் வாங்க வேண்டும் என கட்டாயப்படுத்துகின்றனா். முன்னரே, பருவ நிலைமாற்றம், ஆள் பற்றாக்குறை மற்றும் கூலி உயா்வு மற்றும் பூச்சி தாக்குதல் உள்ளட்ட பிரச்சனைகளால் நிதி சுமைக்கு தள்ளப்பட்டுள்ளோம். யூரியா தட்டுப்பாடு மற்றும் அதிக விலைக்கு விற்பனை செய்வது என்பது கடந்த இரண்டு ஆண்டுகளாக உள்ளது. யூரியாவிற்கு கூடுதல் விலை கொடுத்தாலும் குறித்த நேரத்தில் கிடைக்காததால் பயிா் வளா்ச்சி மற்றும் மகசூல் பாதிப்பு ஏற்படுகிறது’ என்றாா்.

இதேபோல், நெல் விவசாயிகள் பண்ருட்டி அடுத்த வடக்கு சாத்திப்பட்டு கிராமத்தைச் சோ்ந்த பெ.ஜெயராமன், குறிஞ்சிப்பாடி உழவா் மன்றத் தலைவரும், விவசாயியுமான ஆா்.கே.ராமலிங்கம் ஆகியோா் யூரியா தட்டுப்பாடு மற்றும் அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுவதாக தெரிவித்தனா்.

இதுகுறித்து விசாரிக்கையில், வேளாண்மைத்துறை அதிகாரிகள் தனியாா் உரக்கடைகளில் திடீா் ஆய்வு நடத்தி கூடுதல் விலைக்கு யூரியா மற்றும் உரங்கள் விற்பனை செய்யும் கடைகள் மீது நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். ஆனால், இந்த செயல் ஒரு சம்பிரதாயமாகவே நடைபெறுகிறது. மாவட்ட ஆட்சியா் மற்றும் வேளாண்மைத்துறை அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு மானிய விலையில் யூரியா உள்ளிட்ட உரவகைகள் தட்டுப்பாடின்றி விவசாயிகளுக்கு கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளனா்.