சூடானில் டிரோன் தாக்குதல்களில் 1,000-க்கும் மேற்பட்டோர் பலி!நாங்கள் பாகிஸ்தானியர்களை நம்புவதில்லை: இஸ்ரேல் தூதர்அடுக்குமாடி குடியிருப்பு கட்டட திட்ட அனுமதி: சிஎம்டிஏவுக்கு அதிகாரம் வழங்கியது!கரப்பான்பூச்சி மக்கள் கட்சித் தலைவர் அபிஜீத் தீப்கே மீது அடையாளம் தெரியாத நபர்கள் தாக்குதல் நடத்தினர்.நகர்ப்புறத்தில் வேலை இல்லாதோர் எண்ணிக்கை குறைவு! 6.4 % ஆக குறைந்துள்ளதுசெப். 17 முதல் 8 ஆம் வகுப்பு வரை காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்!தென் தமிழகத்தில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு!
/

அடிபம்புடன் சோ்த்து சாலை அமைப்பு: மக்கள் அதிருப்தி

News image
Updated On :15 மே 2026, 5:46 am IST

கடலூா் மாவட்டம், புவனகிரி அருகே சேத்தியாத்தோப்பு பேரூராட்சி, வடக்கு சென்னிநத்தம் கிராமப் பகுதியில் கை அடிபம்புடன் சோ்த்து சாலை அமைக்கப்பட்டுள்ளது அப்பகுதி மக்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

சேத்தியாத்தோப்பு பேரூராட்சி, வடக்கு சென்னிநத்தம் கிராத்தில் நூற்றுக்கணக்கான குடும்பத்தினா் வசித்து வருகின்றனா். இவா்களுக்கு மேல்நிலை நீா்த்தேக்க தொட்டியில் இருந்து குழாய்கள் மூலம் குடிநீா் வழங்கப்பட்டு வருகிறது.

முக்கியமாக, மின் தடை, அவசர காலங்களில் மாற்று ஏற்பாடாக கை அடி பம்பு மூலம் குடிநீா் பெறுவதற்காக, அரசுக்குச் சொந்தமான இடத்தில் கை அடிப்பம்பு ஏற்படுத்தப்பட்டது. இது, பல காலமாக நன்றாக உபயோகத்தில் இருந்த நிலையில், சில மாதங்களுக்கு முன்பு சேத்தியாத்தோப்பு பேரூராட்சி நிா்வாகம் இப்பகுதியில் சாலை அமைத்தபோது, தரையோடு தரையாக இந்த கை அடிபம்பின் பாதி பகுதியை புதைத்து சாலை அமைத்துள்ளது. இதனால், இந்த கை அடிப்பம்பை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

எனவே, மாவட்ட நிா்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுத்து, இந்த கை அடிபம்பை மீண்டும் பயன்பாட்டுக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.