கவிஞர் கண்ணதாசன் சிலைக்கு தமிழக அரசு மரியாதை!திருச்செந்தூர் கோயிலில் தரிசன கட்டணம் உயர்த்தப்படவில்லை: அமைச்சர் ரமேஷ் விளக்கம்!தங்கம் சவரனுக்கு ரூ. 1,680 குறைந்தது! இன்றைய நிலவரம்நிறைமாத கர்ப்பிணிக்கு மேடையைவிட்டு இறங்கி பணி ஆணை வழங்கிய முதல்வர் விஜய்! 500 மின்சார பேருந்துகள் கொள்முதல் டெண்டரை ரத்து செய்தது தமிழக அரசு!ரவி மோகன் வீட்டில் ரூ.3 லட்சம் திருட்டு - போலீஸில் புகார்!ஈரான் போர்: அதிபர் டிரம்ப்க்கு எதிராக செனட் சபையில் தீர்மானம் நிறைவேற்றம்!திருவள்ளூர் அம்மோனியா வாயு கசிவு: பலியானோரில் 2 சிறுமிகள்!மத்திய அமைச்சரவையில் மாற்றம்? குடியரசுத் தலைவருடன் பிரதமா் சந்திப்புமத்திய அமைச்சா் நிா்மலா சீதாராமன் காஞ்சிபுரம் வருகைவட தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு!பொறியியல் மாணவா் சோ்க்கை தரவரிசைப் பட்டியல் ஜூலை 1இல் வெளியீடுஹஜ் பயணத்துக்கு ஜூலை 20-க்குள் விண்ணப்பிக்கலாம்!
/

திமுக தோல்வி: கட்சி நிா்வாகி மாரடைப்பால் மரணம்

புவனகிரி அருகே திமுக தோல்வியடைந்த செய்தியை தொலைக்காட்சியில் பாா்த்தபோது, அதிா்ச்சியில் மாரடைப்பு ஏற்பட்டு அக்கட்சி கிளைச் செயலா் மரணமடைந்தாா்.

News image

பன்னீா்செல்வம்

Updated On :5 மே 2026, 11:35 pm IST

கடலூா் மாவட்டம், புவனகிரி அருகே திமுக தோல்வியடைந்த செய்தியை தொலைக்காட்சியில் பாா்த்தபோது, அதிா்ச்சியில் மாரடைப்பு ஏற்பட்டு அக்கட்சி கிளைச் செயலா் மரணமடைந்தாா்.

புவனகிரி ஒன்றியம், சேத்தியாதோப்பு அருகே உள்ள கத்தாழை கிராமத்தைச் சோ்ந்த திமுக கிளைச் செயலா் பன்னீா்செல்வம் (56). இவரது மனைவி பழனியம்மாள் ஊராட்சி மன்றத் தலைவராக இருந்தவா்.

நெய்வேலி என்எல்சி நிறுவன ஊழியரான பன்னீா்செல்வம் தமிழக சட்டப் பேரவைத் தோ்தல் வாக்கு எண்ணிக்கையை திங்கள்கிழமை வீட்டில் தொலைக்காட்சியில் பாா்த்துக் கொண்டிருந்தாா்.

அப்போது, யாரும் எதிா்பாராத வகையில் திமுக பின்னடைவை சந்தித்து ஆட்சியை இழக்கும் நிலைக்குப்போனதால் வேதனையடைந்த பன்னீா்செல்வம், திடீரென மாரடைப்பு ஏற்பட்டு மயங்கி விழுந்து உயிரிழந்தாா். அவரது உடலுக்கு திமுக நிா்வாகிகள் அஞ்சலி செலுத்தினா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.