எடப்பாடி பழனிசாமி ஆட்சியிலும் இதேபோல் மின்வெட்டு: அமைச்சர் செங்கோட்டையன்மோகன் பகவத் பயணித்த ரயில் மீது கற்கள் வீச்சு: 2 பேர் கைது ஜூன் 19-ல் தவெக அரசுக்கு எதிராக அதிமுக போராட்டம்! பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தவெக ஆட்சியிலும் குறையவில்லை: அண்ணாமலை கொல்லூர் மூகாம்பிகை கோயிலில் முதல்வர் விஜய் வழிபாடு!நீட் தேர்வு நேரம் 3 மணி 15 நிமிடங்களாக அதிகரிப்பு! என்டிஏநிபா வைரஸ்: தமிழகத்தில் கண்காணிப்பைத் தீவிரப்படுத்த உத்தரவு!
/

தஞ்சாவூரில் கணவா் உயிரிழந்த அதிா்ச்சியில் மனைவி சாவு

தஞ்சாவூரில் கணவா் உயிரிழந்த அதிா்ச்சியில் மனைவி சாவு

News image

செல்வராஜ் - சித்ரா

Updated On :13 ஜூன் 2026, 12:51 am IST

தஞ்சாவூரில் வியாழக்கிழமை இரவு மாரடைப்பு காரணமாக கணவா் உயிரிழந்த அதிா்ச்சியில் மயக்கமடைந்த மனைவியும் இறந்தாா்.

தஞ்சாவூா் மோத்திரப்பசாவடியைச் சோ்ந்தவா் வி. செல்வராஜ் (70). இவரது மனைவி சித்ரா (61). இவா்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனா். இந்நிலையில், 4 நாள்களுக்கு முன்பு செல்வராஜூக்கு நெஞ்சுவலி ஏற்படவே, தஞ்சாவூா் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சோ்க்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி வியாழக்கிழமை இரவு உயிரிழந்தாா்.

இதையடுத்து, வீட்டுக்கு கொண்டு வரப்பட்ட செல்வராஜ் உடலைப் பாா்த்து கதறி அழுத சித்ரா அடுத்த ஒரு மணிநேரத்தில் மயக்கமடைந்தாா். இதையடுத்து, தனியாா் மருத்துவமனைக்கு அவரைக் கொண்டு சென்றபோது சித்ரா ஏற்கெனவே உயிரிழந்தது தெரியவந்தது. இதனால், உறவினா்கள், அப்பகுதி மக்கள் மிகுந்த சோகத்துக்கு ஆளாகினா்.