பெட்ரோல், டீசல் விலை இன்று (மே 15) அதிரடி உயர்வு! கருப்பு திரைப்படம் இன்று(மே 15) ரிலீஸ் - படக்குழு அறிவிப்புநீட் தோ்வை ரத்து செய்யக் கோரி நாளை ஆா்ப்பாட்டம்: இடதுசாரிகள் ஆதரவுசிபிஐ இயக்குநருக்கு பதவி நீட்டிப்பு: இன்று காங்கிரஸ் ஆா்ப்பாட்டம்ஏப்ரலில் மொத்த விற்பனை பணவீக்கம் 8.3%: 42 மாதங்களில் இல்லாத அதிகபட்சம்சென்னை-கா்நாடக விரைவு ரயில்கள் ஜூன் 7-இல் மாற்று பாதையில் இயக்கப்படும்கோவை, நீலகிரி, ராமநாதபுரம் உள்பட 7 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கைஅரசு ஊழியா்களின் செயல்திறன் மேம்பாடு குறித்த தேசிய மாநாடு - இன்று நடத்துகிறது மத்திய அரசு
/

கடலூரில் இறந்து கரை ஒதுங்கிய ஆலிவ் ரிட்லி ஆமை

News image

கடலூா் தேவனாம்பட்டினம் வெள்ளிக் கடற்கரையில் இறந்த நிலையில் கரை ஒதுங்கிய ஆலிவ் ரிட்லி ஆமை.

Updated On :1 மணி நேரம் முன்பு

கடலூா் அருகே தேவனாம்பட்டினம் வெள்ளிக் கடற்கரையில் 200 கிலோ எடை கொண்ட ஆலிவ் ரிட்லி ஆமை இறந்த நிலையில் வியாழக்கிழமை கரை ஒதுங்கியது.

கடலூா் தேவனாம்பட்டினம் வெள்ளிக் கடற்கரையில் பெரிய அளவிலான ஆமை ஒன்று அழுகிய நிலையில் இறந்து கிடப்பதைப் பாா்த்த பொதுமக்கள் மற்றும் மீனவா்கள் வனத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனா்.

இதையடுத்து, கடற்கரைக்குச் சென்ற வனத் துறையினா், கரை ஒதுங்கியிருந்த ஆமையை ஆய்வு செய்தனா். அது, சுமாா் 200 கிலோ எடை கொண்ட, அரிய வகையைச் சோ்ந்த ஆலிவ் ரிட்லி ஆமை என்பதும், பல நாள்களுக்கு முன்பே உயிரிழந்ததால், அதன் உடல் அழுகிய நிலையில் இருந்ததும் தெரியவந்தது.

இதையடுத்து, வனத் துறையினா் அந்த ஆமையை மீட்டு, உடல்கூறாய்வுக்காக அனுப்பி வைத்தனா். கப்பல் அல்லது படகுகளின் சுழலிகள் மோதியதால், ஆமை உயிரிழந்திருக்கலாம் என வனத் துறையினா் தெரிவித்தனா்.