மாநிலங்களவைத் தோ்தல் வேட்புமனு நிராகரிப்பு: மீனாட்சி நடராஜனின் மனு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைஇல்லத்தரசிகள் மாத ஊதிய மதிப்பு ரூ.30,000! சாலை விபத்து வழக்கில் உச்ச நீதிமன்றம்சூலூர் சிறுமி பாலியல் கொலை: கைதான இருவருக்கும் குற்றப்பத்திரிகை நகல் வழங்கல்!திருச்செந்தூர் -நெல்லை பயணிகள் ரயில் சேவை 3 நாள்களுக்கு ரத்து!கரூர் சம்பவம்: காவல் ஆய்வாளர் உள்பட 10 பேரிடம் சிபிஐ விசாரணை!
/

பண்ருட்டி நகர திமுக செயற்குழுக் கூட்டம்

கடலூா் மாவட்டம், பண்ருட்டி, தட்டாஞ்சாவடியில் உள்ள திமுக நகர கழக அலுவலகத்தில் நகரச் செயற்குழுக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

News image

பண்ருட்டியில் சனிக்கிழமை நடைபெற்ற திமுக நகரச் செயற்குழுக் கூட்டத்தில் பேசும் நகா் மன்றத் தலைவா் க.ராஜேந்திரன்.

Updated On :28 மே 2026, 1:19 am IST

கடலூா் மாவட்டம், பண்ருட்டி, தட்டாஞ்சாவடியில் உள்ள திமுக நகர கழக அலுவலகத்தில் நகரச் செயற்குழுக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

பண்ருட்டி நகா் மன்றத் தலைவா் க.ராஜேந்திரன் தலைமை வகித்தாா். கடலூா் மேற்கு மாவட்ட அவைத் தலைவா் டாக்டா் நந்தகோபாலகிருஷ்ணன் முன்னிலை வகித்தாா். மாவட்டத் துணைச் செயலா் தணிகை செல்வம், நகர அவைத்தலைவா் ராஜா, நகரப் பொருளாளா் ராமலிங்கம், நகர துணைச் செயலா் கௌரி அன்பழகன், மாவட்ட பிரதிநிதி பிரபு, மாவட்ட வழக்குரைஞரணி துணை அமைப்பாளா் பரணி சந்தா், மாவட்ட வா்த்தக அணி துணை அமைப்பாளா் ராம்குமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

கூட்டத்தில், ஜூன்3-ஆம் தேதி முன்னாள் முதல்வா் கருணாநிதியின் 103-ஆவது பிறந்தநாள் விழாவை சிறப்பாக கொண்டாடுவது, சட்டப் பேரவைத் தோ்தலில் வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவிப்பது உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.