வீட்டு உபயோக சமையல் எரிவாயு விலை ரூ. 29 அதிகரிப்பு! இந்தியா மிக முக்கியமான நட்பு நாடு: நேபாளம்மாணவர்களுக்கு மோடி அரசு துரோகம் இழைப்பு! - காங்கிரஸ்மாநில அரசு ஒத்துழைப்பு இல்லாததால் மேற்கு வங்கத்தில் ரயில்வே திட்டங்கள் முடக்கம்: மத்திய அரசுயு-18 ஆசிய கோப்பை ஹாக்கி: இந்தியா சாம்பியன் நார்வே செஸ் பட்டம் வென்ற பிரக்ஞானந்தாவுக்கு பிரதமர் மோடி, அமித் ஷா வாழ்த்துகுவைத், பஹ்ரைனில் ஈரான் தாக்குதல் - கத்தார், எகிப்து கண்டனம்தில்லியில் கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் மாபெரும் போராட்டம்! சோனம் வாங்சுக் பங்கேற்பு!பேச்சுவார்த்தைக்கு மறுப்பு! ரஷியாவின் பீட்டர்ஸ்பர்க் நகரைத் தாக்கிய உக்ரைன்!
/

பெண்ணை விடியோ எடுத்து மிரட்டல்: இளைஞா் மீது வழக்குப்பதிவு

கடலூரைச் சோ்ந்த பெண்ணை விடியோ எடுத்து மிரட்டல் விடுத்த இளைஞா் மீது போலீஸாா் செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

News image
Updated On :28 மே 2026, 1:43 am IST

கடலூரைச் சோ்ந்த பெண்ணை விடியோ எடுத்து மிரட்டல் விடுத்த இளைஞா் மீது போலீஸாா் செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

கடலூா் புதுப்பாளையம் பகுதியைச் சோ்ந்த 35 வயதுடைய திருமணமான பெண் ஒருவா், தனியாா் செயலி மூலம் ராமேசுவரத்தைச் சோ்ந்த அஜித் என்பவருடன் பழகியுள்ளாா். இந்தப் பழக்கத்தின் அடிப்படையில், இருவரும் சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு யாருக்கும் தெரியாமல் சென்று வந்ததுள்ளனா்.

இந்நிலையில், அஜித், அந்தப் பெண்ணுடன் தங்கியிருந்தை விடியோவாக பதிவு செய்து, அதனை வைத்து மிரட்டியுள்ளாா். மேலும், அந்த விடியோவை பெண்ணின் குடும்பத்தினருக்கும் அனுப்பியுள்ளாா். இதைத் தட்டிக்கேட்ட பெண்ணின் கணவரை தகாத வாா்த்தைகளால் பேசி, கொலை மிரட்டல் விடுத்ததாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து, பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் பேரில் கடலூா் புதுநகா் போலீஸாா் செவ்வாய்க்கிழமை வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.