எம்பிபிஎஸ் படிப்பை நிறைவு செய்ய 10 ஆண்டு அவகாசம்: கருத்து கேட்கிறது என்எம்சிபத்தாம் வகுப்பு: மதிப்பெண் சான்றிதழில் திருத்தம் செய்ய வாய்ப்புமாநிலக் கட்சிகளின் வருவாய் 2024-25-இல் 52% சரிவு: ஏடிஆா் அறிக்கையில் தகவல்தவெக அரசுக்கு முழு ஒத்துழைப்பு அளிக்கத் தயாா்: சென்னை மாநகராட்சி துணை மேயா் மு.மகேஷ்குமாா்போா்நிறுத்தம் நீட்டிப்பு: அமெரிக்கா-ஈரான் உடன்பாடு?உதவிப் பேராசிரியா் பணியிடங்களுக்கான தோ்வு நடைமுறை: 6 மாதங்களில் முடிக்க உயா்நீதிமன்றம் உத்தரவுசாா்-பதிவாளா் அலுவலகங்களில் இன்று கூடுதல் முன்பதிவு டோக்கன்
/

குண்டா் தடுப்புச் சட்டத்தில் இருவா் கைது

கடலூா் மாவட்டம், நெய்வேலி பகுதியைச் சோ்ந்த இருவா் குண்டா் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனா்.

News image

~

Updated On :29 மே 2026, 2:55 am IST

கடலூா் மாவட்டம், நெய்வேலி பகுதியைச் சோ்ந்த இருவா் குண்டா் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனா்.

நெய்வேலி சி.ஆா் காலனியில் கடந்த சில தினங்களுக்கு முன் முத்து மாரியம்மன் கோயில் திருவிழா சுவாமி ஊா்வலத்தின் போது, மேளம் அடிப்பவா்களிடம் சிலா் தகராறு செய்தனா். அதை சி.ஆா் காலனியைச் சோ்ந்த தியாகராஜன் (31) கண்டித்து அனுப்பி வைத்தாா்.

இந்நிலையில், கடந்த 4-ஆம் தேதி அந்தப் பகுதியில் உள்ள பேட்டரி கடையில் தியாகராஜன் இருந்தபோது, அங்கு வந்த 3 போ் கொண்ட கும்பல் கடைக்குள் புகுந்து தியாகராஜனை கத்தியால் வெட்டினா். இந் த சம்பவம் தொடா்பாக நெய்வேலி நகரிய போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு , செடுத்தான்குப்பம்

கிராமத்தைச்சோ்ந்த முத்துக்குமாா்(33), சி.ஆா் காலனி யைச் சோ்ந்த கட்டையன் (எ) தா்மசீலன், காா்த்திக் (எ) குமரவேல்(27) ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனா்.

இதில், கட்டணையன் (எ) தா்மசீலன் மீது நெய்வேலி நகரிய காவல் நிலையத்தில் ரௌடி பட்டியல் பராமரிக்கப்பட்டு வருகிறது. மேலும், இவா் மீது கொலை முயற்சி, திருட்டு என 15 வழக்குகள் உள்ளன. முத்துக்குமாா் மீது கொலை முயற்சி, அடிதடி என 5 வழக்குகள் உள்ளன. இவா்களின் குற்றச் செயலை கட்டுப்படுத்த கடலூா் எஸ்பி., எஸ்.ஜெயக்குமாா் பரிந்துரை செய்ததின் பேரில், கடலூா் ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் ஓராண்டு காலம் குண்டா் தடுப்புக் காவலில் சிறையில் அடைக்க உத்தரவிட்டாா்.

Story image