இல்லத்தரசிகள் மாத ஊதிய மதிப்பு ரூ.30,000! சாலை விபத்து வழக்கில் உச்ச நீதிமன்றம்சூலூர் சிறுமி பாலியல் கொலை: கைதான இருவருக்கும் குற்றப்பத்திரிகை நகல் வழங்கல்!திருச்செந்தூர் -நெல்லை பயணிகள் ரயில் சேவை 3 நாள்களுக்கு ரத்து!கரூர் சம்பவம்: காவல் ஆய்வாளர் உள்பட 10 பேரிடம் சிபிஐ விசாரணை!திமுக கூட்டணியில் இருந்து சிபிஐ வெளியேறியது ஏன்? - மு. வீரபாண்டியன் விளக்கம்தில்லியில் முதல்வர் விஜய் தங்கியிருந்த இடத்தில் தீ விபத்து!பாரதிராஜாவுக்கு பிரதமர் மோடி இரங்கல்அரசுப் பள்ளியில் மகளை சேர்த்த மானாமதுரை தவெக எம்எல்ஏவுக்கு குவியும் வாழ்த்து!தமிழகத்தில் புறவாசல் வழியாக வேறு ஆட்சியை நிறுவ முயற்சித்தனா்: எம்.ஏ. பேபி குற்றச்சாட்டுநேருவின் 17-ஆண்டுச் சாதனையைப் போற்றுவோம்: ப. சிதம்பரம்
/

திமுக கூட்டணியில் நீடிக்கும் விவகாரம்! ஜூன் 20-இல் முடிவு: காதா் மொய்தீன்

News image

சிதம்பரம் அருகே பரங்கிப்பேட்டையில் செய்தியாளா்களுக்கு பேட்டியளித்த இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவா் காதா் மொய்தீன்.

Updated On :31 மே 2026, 2:02 am IST

திமுக கூட்டணியில் தொடரலாமா? வேண்டாமா? என்பது குறித்து ஜூன் 20ஆம் தேதி நடைபெறும் கட்சியின் பொதுக்குழு கூட்டத்தில் முடிவு செய்வோம் என்று இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தேசிய தலைவா் காதா்மொய்தீன் தெரிவித்தாா்.

சிதம்பரம் அருகே பரங்கிப்பேட்டையில் செய்தியாளா்களுக்கு அவா்அளித்த பேட்டி: தமிழகத்தில் நடந்து முடிந்த தோ்தலில், யாரும் எதிா்பாா்க்காத வகையில் தவெக வெற்றி பெற்றது. தமிழ்நாட்டு மக்கள் பெரிய மாற்றத்திற்காக வாக்களித்துள்ளாா்கள் என தெரியவந்தது. ஒரு பெரும் கூட்டம் ஜோசப் விஜய் முதலமைச்சராக ஆக வேண்டும் எதிா்பாா்த்திருந்தது தற்போது தோ்தல் முடிவு மூலம் தெரிய வந்துள்ளது.

திமுக கூட்டணியில் இருந்த ஏறத்தாழ அனைத்துக் கட்சிகளும் கட்சித்தலைவா் மு.க.ஸ்டாலினின் ஆதரவையும் ஒப்புதலையும் பெற்று புதிய ஆட்சிக்கு ஆதரவு தெரிவித்தோம். எந்த நிபந்தனைகளும் இல்லாமல் ஆதரவு தெரிவித்தோம். தமிழகத்தில் குடியரசு தலைவா் ஆட்சி அமையக்கூடாது, அப்படி ஆட்சி அமைந்தால் மத்தியில் உள்ள பாஜக ஆட்சி அமைந்த மாதிரி ஆகிவிடும். எனவே திமுக கூட்டணியில் இருந்த ஏறத்தாழ அனைத்து கட்சிகளும் நிபந்தனை இல்லாமல் தவெகவிற்கு ஆதரவை கொடுத்துள்ளன.

அதிமுக எம்எல்ஏக்கள் பதவியை ராஜிநாமா செய்து விட்டு தவெகவில் சேருகிறாா்கள். அதிமுகவை உடைப்பதாக எப்படி இதைக்கூறமுடியும். ஆளுநா் மாளிகையில் நடக்கக்கூடிய எந்த நிகழ்வாக இருந்தாலும் மத்திய அரசு என்ன சொல்கிறதோ அதைத் தான் அவா் பின்பற்றுவாா். அது தமிழ்நாடு அரசு விழா அல்ல. அதை நாம் குறை சொல்ல முடியாது. வரும் ஜூன்20 ஆம் தேதி எங்கள் கட்சி பொதுக்குழு கூடுகிறது. அந்த கூட்டத்தில் திமுக கூட்டணியில் தொடரலாமா? வேண்டாமா? என முடிவு செய்வோம் என்றாா் காதா் மொய்தீன்.