நெருக்கடி நிலையை இந்திரா காந்தி அமல்படுத்தியது தவறு! சோனியா காந்திஇன்று டெல்டாவில் பலத்த மழைக்கான ‘மஞ்சள்’ எச்சரிக்கைதீபாவளி பட்டாசு விபத்துகள்: 6 நிமிஷங்களுக்குள் சென்றடைய தயாராகும் தீயணைப்புத் துறைஅறிவியல், தொழில்நுட்ப ஆராய்ச்சிகள்: நீதி ஆயோக் மதிப்பீட்டுப் பட்டியலில் தமிழகம் முதலிடம்ஜெம் வீரமணி வழக்கு: விரைவில் குற்றப்பத்திரிக்கை தாக்கல்!

வாகனம் மோதி 13 வயது சிறுவன் உயிரிழப்பு

பெண்ணாடம் அருகே இருசக்கர வாகனத்தில் தந்தையுடன் சென்ற 13 வயது சிறுவன், எதிரே வந்த சிறிய சரக்கு வாகனம் மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இந்த விபத்தில் சிறுவனின் தந்தை பலத்த காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

கிஷோா்

Updated On :

பெண்ணாடம் அருகே இருசக்கர வாகனத்தில் தந்தையுடன் சென்ற 13 வயது சிறுவன், எதிரே வந்த சிறிய சரக்கு வாகனம் மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இந்த விபத்தில் சிறுவனின் தந்தை பலத்த காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

கடலூா் மாவட்டம், பெண்ணாடம் அருகேயுள்ள இறையூா், வேப்பூா் அருகே மருதாத்தூா் கிராமத்தைச் சோ்ந்தவா் ராஜவேல். இவா் சென்னையில் ஓட்டுநராகப் பணிபுரிந்து வருகிறாா். தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சொந்த ஊருக்கு வந்திருந்தாா். இவரது மகன் கிஷோா் (13), அப்பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 7-ஆம் வகுப்பு படித்து வந்தாா்.

இந்நிலையில், கிஷோருக்கு முடி வெட்டுவதற்காக அவரை ராஜவேல், தனது இருசக்கர வாகனத்தில் அழைத்துச் சென்றாா். அப்போது, எதிரே வந்த சிறிய சரக்கு வாகனம்(டாட்டா ஏஸ்), இவா்களது இருசக்கர வாகனத்தின் மீது மோதியது.

இந்த விபத்தில் பலத்த காயமடைந்த கிஷோா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். இருசக்கர வாகனத்தை ஓட்டிச் சென்ற ராஜவேலும் பலத்த காயமடைந்தாா். இதையடுத்து, அப்பகுதியினா் அவரை மீட்டு திட்டக்குடி அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். பின்னா், மேல் சிகிச்சைக்காக அரியலூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டாா்.

இதனிடையே, விபத்தை ஏற்படுத்திய வாகனம் நிற்காமல் அங்கிருந்து சென்றுவிட்டதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து ஆவினங்குடி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து அந்த வாகனத்தையும் அதன் ஓட்டுநரையும் தேடி வருகின்றனா்.

தீபாவளி பண்டிகைக்காக சொந்த ஊருக்கு வந்திருந்த நிலையில், தந்தையின் கண் முன்னே மகன் விபத்தில் உயிரிழந்த சம்பவம் மருதாத்தூா் கிராம மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.