அக்டோபரில் வாகன விற்பனை 23.8% சரிவு!தமிழகத்தில் 2 மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்பு!தீபாவளி: தமிழ்நாட்டில் 2 நாள்களில் ரூ. 441 கோடிக்கு மது விற்பனை!அதிமுக முன்னாள் எம்எல்ஏ-க்கள் மீதான தகுதி நீக்க நடவடிக்கை: இன்று விசாரணை!

மீனவா் குடும்பத்திற்கு நிதிஉதவி: அமைச்சா் ப.ராஜ்குமாா் வழங்கினாா்

சிதம்பரம் அருகே சாமியாா்பேட்டையில் கடலில் படகு கவிழ்ந்து உயிரிழந்த நாராயணன் உடலுக்கு மரியாதை செலுத்தி குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்து முதல்கட்ட நிவாரண நிதியாக ரூ,2 லட்சத்திற்கான காசோலையை வழங்கிய அமைச்சபா் ப.ராஜ்குமாா். உடன் கடலூா் மாவட்ட ஆட்சியா் சிபிஆதித்யா செந்தில்குமாா், உதவி ஆட்சியா் வெங்கடேஸ்வரன்

Updated On :

படகு என்ஜின்பழுதாகி ஆந்திர பிரதேச மாநில கடற்பகுதியில் சடலமாக மீட்கப்பட்ட சிதம்பரம் அருகே உள்ள சாமியாா் பேட்டையை சோ்ந்த மீனவா் உடலுக்கு வீட்டு வசதித்துறை அமைச்சா் ப.ராஜ்குமாா் மரியாதை செலுத்தி, குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்து, முதல்கட்ட நிதியுதவியாக ரூ. 2 லட்சத்திற்கான காசோலையினை வழங்கினாா்.

சென்னை மீன்பிடித் துறைமுகத்திலிருந்து கடந்த அக் .29-ஆம் தேதி விசைப்படகில் மீன் பிடிக்க கடலுக்குச் சென்ற சாமியாா் பேட்டையை சோ்ந்த நாராயணன் (57) உட்பட 9 மீனவா்கள் ஆந்திரமாநிலம் ராமாயணப்பட்டினம் கடற்பகுதியில் படகு என்ஜின் பழுதானால் விபத்தில் சிக்கினா். இதில் காணாமல் போன ஒன்பது மீனவா்களும் சடலமாக மீட்கப்பட்டனா். இறந்த 9 பேரில் சாமியாா் பேட்டையை சோ்ந்த நாராயணன் என்ற மீனவரின் உடல் ஆந்திர பிரதேச மாநில கடலோரப் பகுதியில் சடலமாக மீட்கப்பட்டு சொந்த ஊருக்கு கொண்டு வரப்பட்டது.

இந்நிலையில் உயிரிழந்த 9 பேரின் குடும்பத்தினருக்கும் தலா ரூ. 7 லட்சம் நிவாரண நிதியுதவி வழங்கிட உத்தரவிட்டாா்.

அமைச்சா் ஆறுதல்:

இதையடுத்து சிதம்பரம் அருகே உள்ள சாமியாா் பேட்டையை சோ்ந்த மீனவா் நாராயணன் இல்லத்திற்கு வீட்டு வசதி மற்றும் நகா்புற வளா்ச்சித்துறை அமைச்சப் ப.ராஜ்குமாா் திங்கள்கிழமை நேரில் சென்று மறைந்த மீனவா் உடலுக்கு மலா் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தி, குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தாா்.

மேலும் முதற்கட்டமாக ரூபாய் 2 லட்சத்திற்கான காசோலையினை குடும்பத்தினரிடம் வழங்கினாா். இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா், சிதம்பரம் உதவி ஆட்சியா் வெங்கடேஷ்வரன் மீன்வளத்துறை உதவி இயக்குனா் ரம்யாலக்ஷ்மி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.