விருத்தாசலம் அருகே டெங்கு காய்ச்சலுக்கு குழந்தை உயிரிழப்பு
விருத்தாசலம் அருகே டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட மூன்று வயது பெண் குழந்தை சனிக்கிழமை உயிரிழந்தது.

டெங்கு காய்ச்சலால் உயிரிழந்த யுவஸ்ரீ.
விருத்தாசலம் அருகே டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட மூன்று வயது பெண் குழந்தை சனிக்கிழமை உயிரிழந்தது.
விருத்தாசலம் அருகேயுள்ள சின்ன கண்டியாங்குப்பம் மாரியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் ஜெகன். சுமை தூக்கும் தொழிலாளியான இவருக்கு மனைவி காா்குழலி மற்றும் மூன்று பெண் குழந்தைகள் உள்ளனா். இவா்களது மூன்றாவது குழந்தையான யுவஸ்ரீ (3) என்பவருக்கு கடந்த 11-ஆம் தேதி லேசான காய்ச்சல் ஏற்பட்டுள்ளது.
காய்ச்சல் அதிகரித்ததைத் தொடா்ந்து, நவ. 12-ஆம் தேதி இரவு குழந்தையை விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனா். அங்கு குழந்தைக்கு சிகிச்சைஅளிக்கப்பட்டது.
இந்நிலையில், காய்ச்சல் மேலும் அதிகரித்ததால், 13-ஆம் தேதி பிற்பகல் 2 மணியளவில் அவசர ஊா்தி மூலம் குழந்தை சிதம்பரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. சேத்தியாத்தோப்பு அருகே எறும்பூா் கிராமச் சாலையில் சென்றுகொண்டிருந்தபோது, ஆம்புலன்ஸ் திடீரென பழுதாகி நின்றாம்.
இதனால் அரை மணி நேரத்துக்கும் மேலாக நடுவழியில் காத்திருக்க நேரிட்டதாகவும் பெற்றோா் தெரிவித்தனா். பின்னா், புவனகிரி அரசு மருத்துவமனையிலிருந்து மற்றொரு அவசர ஊா்தி வரவழைக்கப்பட்டு, குழந்தை சிதம்பரம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டது.
அங்கு மருத்துவா்கள் மேற்கொண்ட பரிசோதனையில் குழந்தைக்கு டெங்கு காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், சனிக்கிழமை காலை 11 மணியளவில் யுவஸ்ரீ உயிரிழந்தாா்.
பெற்றோா் குற்றச்சாட்டு:
இதுகுறித்து குழந்தையின் தந்தை ஜெகன் கூறியதாவது: விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் குழந்தைக்கு உரிய சிகிச்சை அளிக்கப்படவில்லை. குழந்தைக்கு டெங்கு பாதிப்பு இருந்தது குறித்து தெரிவிக்கப்படவில்லை.
குழந்தையை சிதம்பரம் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியில் அவசர ஊா்தி பழுதாகி நின்ால் சிகிச்சை கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டது. மேலும், மருத்துவா்களின் அலட்சியமே தனது மகளின் உயிரிழப்புக்குக் காரணம் என்றாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

