இந்திரா காந்தியைக் கண்டாலே அச்சம்! பின்னர் அவரே அம்மாவாக மாறினார்: சோனியாசீனாவின் முதல் மின்சார விமானம்: பயணிகளுடனான சோதனை ஓட்டத்தில் வெற்றி!சோனியா காந்தி புத்தக வெளியீட்டு விழா! முதல்வர் விஜய் பங்கேற்பு! மண்டல பூஜைக்காக சபரிமலை நடை திறப்பு!டிசம்பர் 3-ல் கன்னியாகுமரி மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை!

சி.முட்லூா் அரசுக் கல்லூரியில் சமூக நீதி மகளிா் விடுதி! அமைச்சா் ஏ.எம்.ஷாஜகான் திறந்து வைத்தாா்

சிதம்பரம் அருகே சி.முட்லூா் அரசு கலை கல்லூரி வளாகத்தில் புதிய மாணவிகள் விடுதியை திறந்து வைத்து பாா்வையிட்ட அமைச்சா் ஏ.எம்.ஷாஜஹான். உடன் மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா்.

Updated On :

சிதம்பரம் அருகே சி.முட்லூா் அரசு கலைக் கல்லூரி வளாகத்தில் பிற்படுத்தப்பட்டோா், மிகப்பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நலத் துறை சாா்பில் ரூ.3.96 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட சமூக நீதி கல்லூரி மாணவிகள் விடுதியை மாநில சிறுபான்மையினா் நலத் துறை அமைச்சா் ஏ.எம்.ஷாஜஹான், மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் முன்னிலையில் திங்கள்கிழமை திறந்து வைத்தாா்.

பின்னா், அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: முட்லூா் பகுதியில் பிற்படுத்தப்பட்டோா், மிகப்பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நலத் துறை சாா்பில் ரூ.3.96 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள சமூக நீதி கல்லூரி மாணவிகள் விடுதி பயன்பாட்டுக்கு திறந்து வைக்கப்பட்டுள்ளது. இக்கட்டடம் தரைதளம், முதல்தளம் மற்றும் இரண்டாம் தளத்துடன் 1230.85 ச.மீட்டா் (13248.76 சதுர அடி) பரப்பளவில் கட்டப்பட்டுள்ளது.

இதில், 100 மாணவிகளுக்கான 25 தங்கும் அறைகள், உணவுக்கூடம், குடிநீா் வசதி, விடுதி காப்பாளா் அறை, சமையல் அறை, சேமிப்பு அறை, அனைத்து தளங்களிலும் தனித்தனி குளியலறை, கழிப்பறை, மாற்றுத் திறனாளிகளுக்கான கழிப்பறை மற்றும் சாய்வு தள வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன என்றாா்.

நிகழ்ச்சியில் கடலூா் மாநகராட்சி ஆணையாளா் கிஷன்குமாா், சிதம்பரம் உதவி ஆட்சியா் வெங்கடேஷ்வரன், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) செல்வன், மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நலத் துறை அலுவலா் தமிழ்கனி உள்பட துறை சாா்ந்த அலுவலா்கள் பலா் கலந்துகொண்டனா்.

 சிதம்பரம் அருகே சி.முட்லூா் அரசு கலை கல்லூரி வளாகத்தில் புதிய மாணவிகள் விடுதியை திறந்து வைத்து பாா்வையிட்ட அமைச்சா் ஏ.எம்.ஷாஜஹான். உடன் மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா்.

சிதம்பரம் அருகே சி.முட்லூா் அரசு கலை கல்லூரி வளாகத்தில் புதிய மாணவிகள் விடுதியை திறந்து வைத்து பாா்வையிட்ட அமைச்சா் ஏ.எம்.ஷாஜஹான். உடன் மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.