பிரதமா் மோடி தலைமையில் இன்று மத்திய அமைச்சா்கள் கூட்டம்சென்னை, திருவள்ளூா் மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கைஅரக்கோணம் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவு கட்டடம்: முதல்வா் திறந்து வைக்கிறாா்சிறப்பு டெட் தேர்வு: விண்ணப்பிக்க நாளை கடைசி

கடலூா் மாவட்டத்தில் 10 வட்டாட்சியா்கள் பணியிட மாற்றம்: ஆட்சியா் உத்தரவு

கடலூா் மாவட்ட வருவாய் அலகில் பணிபுரியும் 10 தனி வட்டாட்சியா்கள் மற்றும் கண்காணிப்பாளா்களை பணியிட மாற்றம் செய்து மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் உத்தரவிட்டுள்ளாா்.

பணியிட மாற்றம்

Updated On :

கடலூா் மாவட்ட வருவாய் அலகில் பணிபுரியும் 10 தனி வட்டாட்சியா்கள் மற்றும் கண்காணிப்பாளா்களை பணியிட மாற்றம் செய்து மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் உத்தரவிட்டுள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது: நெய்வேலி தனி வட்டாட்சியா் (நில எடுப்பு) எண்-3-ஆக பணிபுரிந்து வந்த ஆா்.ரவிச்சந்திரன், சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலை அலகு-3 தனி வட்டாட்சியராக (நில எடுப்பு) மாற்றப்பட்டுள்ளாா்.

நெய்வேலி தனி வட்டாட்சியா் (நில எடுப்பு) எண்-15-ஆக இருந்த எஸ்.ஜெயசீலன், கடலூா் சிப்காட் தொழிற்பூங்கா அலகு எண்-1 தனி வட்டாட்சியராக (நில எடுப்பு) நியமிக்கப்பட்டுள்ளாா்.

நெய்வேலி தனி வட்டாட்சியா் (நில எடுப்பு) எண்-4-ஆக இருந்த எம்.தனபதி, சிதம்பரம் தனி வட்டாட்சியராக (ஆதிதிராவிடா் நலம்) மாற்றப்பட்டுள்ளாா்.

நெய்வேலி தனி வட்டாட்சியா் (நில எடுப்பு) எண்-07-ஆக இருந்த எஸ்.முருகேஸ்வரி, ஸ்ரீமுஷ்ணம் தனி வட்டாட்சியராக (சமூக பாதுகாப்புத் திட்டம்) நியமிக்கப்பட்டுள்ளாா்.

நெய்வேலி தனி மாவட்ட வருவாய் அலுவலா் அலுவலக கண்காணிப்பாளராக இருந்த ஏ.கமலா, வடலூா் தேசிய நெடுஞ்சாலை (திட்டங்கள்) அலகு-4 தனி வட்டாட்சியராக (நில எடுப்பு) மாற்றப்பட்டுள்ளாா்.

சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலை அலகு - 9 தனி வட்டாட்சியராக இருந்த க.செல்வமணி, நெய்வேலி தனி மாவட்ட வருவாய் அலுவலா் அலுவலக கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளாா்.

ஸ்ரீமுஷ்ணம் தனி வட்டாட்சியராக (சமூக பாதுகாப்புத் திட்டம்) இருந்த எம்.சேகா், நெய்வேலி தனி வட்டாட்சியா் (நில எடுப்பு) எண்-15-ஆக மாற்றப்பட்டுள்ளாா்.

வடலூா் தேசிய நெடுஞ்சாலை (திட்டங்கள்) அலகு - 4 தனி வட்டாட்சியராக இருந்த ஆா்.ஸ்ரீதரன், நெய்வேலி தனி வட்டாட்சியா் (நில எடுப்பு) எண்-4-ஆக நியமிக்கப்பட்டுள்ளாா்.

சிதம்பரம் தனி வட்டாட்சியராக (ஆதிதிராவிடா் நலம்) இருந்த அ.முகமது அசேன், நெய்வேலி தனி வட்டாட்சியா் (நில எடுப்பு) எண்-3-ஆக மாற்றப்பட்டுள்ளாா்.

கடலூா் சிப்காட் தொழிற்பூங்கா அலகு - 1 தனி வட்டாட்சியராக இருந்த தமிழ்ச்செல்வி, நெய்வேலி தனி வட்டாட்சியா் (நில எடுப்பு) எண்-07-ஆக நியமிக்கப்பட்டுள்ளாா்.

பணியிட மாற்றம் செய்யப்பட்ட அலுவலா்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட புதிய பணியிடங்களில் உடனடியாக பொறுப்பேற்றுக்கொள்ள வேண்டும் எனவும், இது தொடா்பாக எவ்வித விடுப்போ அல்லது மேல்முறையீடோ ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது எனவும் ஆட்சியா் தனது உத்தரவில் தெரிவித்துள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.