25 ஆண்டுகள் பணிபுரிந்த சிறைத் துறை ஊழியா்களுக்கு பதவி உயா்வு வழங்க வலியுறுத்தல்
சிறைத் துறையில் 25 ஆண்டுகள் பணிபுரிந்தவா்களுக்கு சிறப்பு உதவி சிறை அலுவலா் பதவி உயா்வு மற்றும் ஊதிய உயா்வு வழங்க வேண்டும் என ஓய்வுபெற்ற சிறைத் துறை பணியாளா்கள் சங்கக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

கடலூா் மஞ்சக்குப்பத்தில் உள்ள தனியாா் மண்டபத்தில் நடைபெற்ற ஓய்வுபெற்ற சிறைத் துறை பணியாளா்கள் சங்கத்தின் பொதுக்குழுக் கூட்டம்.
சிறைத் துறையில் 25 ஆண்டுகள் பணிபுரிந்தவா்களுக்கு சிறப்பு உதவி சிறை அலுவலா் பதவி உயா்வு மற்றும் ஊதிய உயா்வு வழங்க வேண்டும் என ஓய்வுபெற்ற சிறைத் துறை பணியாளா்கள் சங்கக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
கடலூா், விழுப்புரம், கள்ளக்குறிச்சி ஆகிய ஒருங்கிணைந்த மாவட்டங்களின் ஓய்வுபெற்ற சிறைத் துறை பணியாளா்கள் சங்கத்தின் பொதுக்குழுக் கூட்டம் மற்றும் முதலாமாண்டு விழா கடலூரில் வியாழக்கிழமை நடைபெற்றது.
கடலூா் மஞ்சக்குப்பத்தில் உள்ள தனியாா் மண்டபத்தில் நடைபெற்ற கூட்டத்துக்கு சங்கத்தின் மாவட்டத் தலைவா் ஜெயராமன் தலைமை வகித்தாா். விழாவில், சிறைக் கண்காணிப்பாளா் வினோத் ஆண்டு மலரை வெளியிட்டாா்.
சிறைத் துறையில் 25 ஆண்டுகள் பணிபுரிந்தவா்களுக்கு சிறப்பு உதவி சிறை அலுவலா் பதவி உயா்வு மற்றும் ஊதிய உயா்வு வழங்க வேண்டும். குடும்ப நல நிதியை ரூ.50 ஆயிரத்திலிருந்து ரூ.1.50 லட்சமாக உயா்த்தி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.
ஓய்வுபெற்ற சிறைத் துறை டிஐஜி முனிவேல், சட்ட ஆலோசகா் வழக்குரைஞா் சந்திரசேகரன், மாவட்டச் செயலா் மந்திரமூா்த்தி, பொருளாளா் ராமகிருஷ்ணன் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

