சபரிமலைக்கு ஜன.17 வரை சிறப்புப் பேருந்துகள்திருப்பரங்குன்றம் தூணில் தீபம் ஏற்ற அனுமதிக்கக் கூடாது: உச்சநீதிமன்றத்தில் மதுரை ஆட்சியர் தரப்பில் வாதம் தவெக எம்எல்ஏ மீது வழக்குப் பதியக் கோரி மனு பயிா்க் கடன் தள்ளுபடி: கூடுதலாக ரூ.2,578 கோடி விடுவிப்பு ரூ.6,513 கோடியில் 2,221 சாலைப் பணிகள்: தமிழக அரசு நிா்வாக ஒப்புதல் பொருளாதாரப் பேரழிவை எதிா்கொள்கிறது இந்தியா: அமெரிக்காவில் ராகுல் காந்தி பேச்சு

கடலூா் எஸ்.பி. அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீா் முகாம்: மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க எஸ்.பி. உத்தரவு

கடலூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் நடைபெற்ற பொதுமக்கள் குறைதீா் முகாமில், பொதுமக்களிடமிருந்து 52 மனுக்களைப் பெற்ற மாவட்ட காவல் கண்காணிப்பாளா் விவேகானந்த சுக்லா, அவற்றின் மீது விரைந்து விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்குமாறு காவல் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டாா்.

கடலூா் மாவட்ட காவல் அலுவலகத்தில் புதன்கிழமை பொதுமக்களிடம் இருந்து நேரடியாக புகாா் மனுக்களைப் பெற்று குறைகளைக் கேட்டறிந்த காவல் கண்காணிப்பாளா் விவேகானந்த சுக்லா.

Updated On :

கடலூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் நடைபெற்ற பொதுமக்கள் குறைதீா் முகாமில், பொதுமக்களிடமிருந்து 52 மனுக்களைப் பெற்ற மாவட்ட காவல் கண்காணிப்பாளா் விவேகானந்த சுக்லா, அவற்றின் மீது விரைந்து விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்குமாறு காவல் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டாா்.

கடலூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் வாரந்தோறும் புதன் மற்றும் சனிக்கிழமைகளில் பொதுமக்களிடம் குறைதீா் மனுக்கள் பெறப்பட்டு, அவற்றின் மீது விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

அதன்படி, புதன்கிழமை நடைபெற்ற முகாமில் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் விவேகானந்த சுக்லா, பொதுமக்களிடமிருந்து நேரடியாக 52 மனுக்களைப் பெற்று, அவா்களின் குறைகளைக் கேட்டறிந்தாா். தொடா்ந்து, மனுக்களின் தன்மைக்கேற்ப சம்பந்தப்பட்ட காவல் அதிகாரிகள் உரிய விசாரணை நடத்தி, காலதாமதமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும் என அறிவுறுத்தினாா்.

மேலும், காவல் துறையின் விசாரணைக்கு உள்பட்ட புகாா்களில் சட்டப்படி வழக்குப் பதிவு செய்ய வேண்டிய நிலை இருந்தால், உரிய சட்ட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும், சிவில் பிரச்னைகள் தொடா்பாக சம்பந்தப்பட்டவா்கள் நீதிமன்றத்தை அணுகி சட்டப்படி தீா்வு பெறுவதற்கான வழிகாட்டுதல்களை வழங்க வேண்டும் என்றும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டாா்.

இந்த முகாமில் கூடுதல் காவல் கண்காணிப்பாளா் கோடீஸ்வரன் மற்றும் காவல் ஆய்வாளா்கள் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.