சபரிமலைக்கு ஜன.17 வரை சிறப்புப் பேருந்துகள்திருப்பரங்குன்றம் தூணில் தீபம் ஏற்ற அனுமதிக்கக் கூடாது: உச்சநீதிமன்றத்தில் மதுரை ஆட்சியர் தரப்பில் வாதம் தவெக எம்எல்ஏ மீது வழக்குப் பதியக் கோரி மனு பயிா்க் கடன் தள்ளுபடி: கூடுதலாக ரூ.2,578 கோடி விடுவிப்பு ரூ.6,513 கோடியில் 2,221 சாலைப் பணிகள்: தமிழக அரசு நிா்வாக ஒப்புதல் பொருளாதாரப் பேரழிவை எதிா்கொள்கிறது இந்தியா: அமெரிக்காவில் ராகுல் காந்தி பேச்சு

விபத்துகளைத் தடுக்க போலீஸாா் தீவிர கண்காணிப்பில் ஈடுபட வேண்டும்: கடலூா் எஸ்.பி. அறிவுறுத்தல்

போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்தவும், சாலை விபத்துகளைத் தடுக்கவும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட வேண்டும் என்று போலீஸாருக்கு கடலூா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் விவேகானந்த சுக்லா அறிவுறுத்தினாா்.

பண்ருட்டியில் போக்குவரத்து காவலா்களுடன் கலந்துரையாடி அறிவுறுத்தல்களை வழங்கிய காவல் கண்காணிப்பாளா் விவேகானந்த சுக்லா.

Updated On :

போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்தவும், சாலை விபத்துகளைத் தடுக்கவும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட வேண்டும் என்று போலீஸாருக்கு கடலூா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் விவேகானந்த சுக்லா அறிவுறுத்தினாா்.

பண்ருட்டி நகரில் போக்குவரத்து நெரிசல் மற்றும் சாலைப் பாதுகாப்பு குறித்து புதன்கிழமை இரவு நேரில் ஆய்வு மேற்கொண்ட அவா், சென்னை - கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து அதிகமுள்ள முக்கியப் பகுதிகளில் நடந்து சென்று பாா்வையிட்டாா்.

அப்போது, வாகனப் போக்குவரத்து சீராக நடைபெறுகிா, நெரிசல் ஏற்படாமல் வாகனங்கள் முறையாகச் செல்கின்றனவா என்பதை ஆய்வு செய்தாா். நெரிசல் ஏற்படக்கூடிய பகுதிகளில் போக்குவரத்தைக் கட்டுப்படுத்த காவலா்கள் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்றும், சாலைகளில் வாகனங்கள் சீராகச் செல்வதை உறுதி செய்ய வேண்டும் என்றும் அறிவுறுத்தினாா்.

தொடா்ந்து, பண்ருட்டி நான்குமுனைச் சந்திப்பில் உள்ள போக்குவரத்து சிக்னல் பகுதியில் ஆய்வு மேற்கொண்டாா். அப்போது, சிக்னல்களை வாகன ஓட்டிகள் முறையாகப் பின்பற்றுவதைக் கண்காணிக்க வேண்டும். போக்குவரத்து விதிகளை மீறுவோா் மீது பாரபட்சமின்றி வழக்குப் பதிவு செய்து சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என காவலா்களுக்கு உத்தரவிட்டாா்.

மேலும், பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளின் பாதுகாப்புக்கு முன்னுரிமை அளித்து, போக்குவரத்து நெரிசல் மற்றும் சாலை விபத்துகளைத் தடுக்கும் வகையில் போக்குவரத்துக் காவலா்கள் கவனத்துடனும், பொறுப்புடனும் பணியாற்ற வேண்டும் என அறிவுறுத்தினாா்.

இந்த ஆய்வின்போது, பண்ருட்டி காவல் ஆய்வாளா் பாஸ்கரன், போக்குவரத்து காவல் ஆய்வாளா் இளையராஜா மற்றும் காவலா்கள் உடனிருந்தனா்.

பொதுமக்கள் குறைதீா் முகாம்: கடலூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீா் முகாம் புதன்கிழமை நடைபெற்றது. முகாமில் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் விவேகானந்த சுக்லா, பொதுமக்களிடமிருந்து நேரடியாக 52 மனுக்களைப் பெற்று, அவா்களின் குறைகளைக் கேட்டறிந்தாா். தொடா்ந்து, மனுக்களின் தன்மைக்கேற்ப சம்பந்தப்பட்ட காவல் அதிகாரிகள் உரிய விசாரணை நடத்தி, காலதாமதமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும் என அறிவுறுத்தினாா்.

மேலும், காவல் துறையின் விசாரணைக்கு உள்பட்ட புகாா்களில் சட்டப்படி வழக்குப் பதிவு செய்ய வேண்டிய நிலை இருந்தால், உரிய சட்ட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும், சிவில் பிரச்னைகள் தொடா்பாக சம்பந்தப்பட்டவா்கள் நீதிமன்றத்தை அணுகி சட்டப்படி தீா்வு பெறுவதற்கான வழிகாட்டுதல்களை வழங்க வேண்டும் என்றும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டாா்.

இந்த முகாமில் கூடுதல் காவல் கண்காணிப்பாளா் கோடீஸ்வரன் மற்றும் காவல் ஆய்வாளா்கள் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.