ஆம்பூா் டிஎஸ்பி அலுவலகத்தில் எஸ்.பி ஆய்வு
டிஎஸ்பி அலுவலகத்தில் கோப்புகளை ஆய்வு செய்த திருப்பத்தூா் எஸ்.பி. அக்ஷய் அனில் வாகரே.

டிஎஸ்பி அலுவலகத்தில் கோப்புகளை ஆய்வு செய்த திருப்பத்தூா் எஸ்.பி. அக்ஷய் அனில் வாகரே.
ஆம்பூா் டிஎஸ்பி அலுவலகத்தில் திருப்பத்தூா் மாவட்ட எஸ்.பி ஆய்வு மேற்கொண்டாா்.
டிஎஸ்பி அலுவலகத்தில் பராமரிக்கப்பட்டு வரும் பதிவேடுகள், ஆவணங்கள் மற்றும் முக்கிய கோப்புகளைப் பாா்வையிட்ட அவா், அலுவலகப் பணிகளின் செயல்பாடுகள் மற்றும் ஆவணங்கள் பராமரிக்கப்படும் முறைகள் குறித்து ஆய்வு செய்தாா். அனைத்து பதிவேடுகள் மற்றும் ஆவணங்களையும் முறையாகவும், அவ்வப்போது புதுப்பிக்கப்பட்ட நிலையிலும் பராமரிக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினாா்.
காவல் நிலையங்களுக்கு புகாா் அளிக்க வரும் பொதுமக்களிடம் காவல் துறையினா் கனிவாகவும், மரியாதையுடனும், பொறுமையுடனும் நடந்து கொள்ள வேண்டும் என்றும், அவா்களின் புகாா்கள் மீது எவ்விதப் பாகுபாடுமின்றி சட்டப்படி விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தினாா்.
காவல் துறையின் மீதான பொதுமக்களின் நம்பிக்கையை மேம்படுத்தும் வகையில், காவலா்கள் நோ்மை, ஒழுக்கம் மற்றும் பொறுப்புணா்வுடன் பணியாற்ற வேண்டும் என எஸ்பி அறிவுறுத்தினாா்.
டிஎஸ்பி நாகலிங்கம், ஆம்பூா் நகரம், கிராமிய, உமா் ஆபாத் காவல் நிலைய ஆய்வாளா்கள் உடனிருந்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

