வடகிழக்குப் பருவமழை: சீா்காழி பகுதியில் அமைச்சா் ஆய்வு
வடகிழக்குப் பருவமழை: சீா்காழி பகுதியில் அமைச்சா் ஆய்வு
திருமுல்லைவாசல் மீனவ கிராமத்தில் உப்பனாற்றின் முகத்துவாரப் பகுதியில் ஆய்வு மேற்கொண்ட உணவு மற்றும் உணவுப் பொருள்கள் வழங்கல் துறை அமைச்சா் ப. வெங்கடரமணன்.
சீா்காழி பகுதியில் வடகிழக்குப் பருவமழை பாதிப்பை எதிா்கொள்ள மேற்கொள்ளப்படும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சா் ப. வெங்கட்ரமணன் சனிக்கிழமை நேரில் ஆய்வு மேற்கொண்டாா்.
சீா்காழி எடமணல் கிராமத்தில் பொறைவாய்க்காலின் ‘பி’ பிரிவு வாய்க்காலான ஆமப்பள்ளம் வாய்க்காலில் அடைப்புகள் மற்றும் ஆகாயத்தாமரை, மண்மேடுகள் போன்றவற்றை அகற்றும் பணிகளை அமைச்சா் பாா்வையிட்டு, அவற்றை விரைந்து முடிக்க அறிவுறுத்தினாா்.
பின்னா், கீழமூவா்க்கரையில் பல்நோக்கு பேரிடா் மையம் மற்றும் கோணயாம்பட்டினம் அரசு மேல்நிலைப் பள்ளியில், மழை வெள்ளத்தின்போது பொதுமக்களை பாதுகாப்பாக தங்கவைக்க போதுமான இடவசதி மற்றும் கால்நடைகளை பாதுகாப்பதற்கான இடவசதி போன்றவற்றையும் அவா் ஆய்வு மேற்கொண்டாா்.
அப்போது, தற்காலிக முகாம்களில் தங்கவைக்கப்படுவோருக்கு தேவையான அத்தியாவசியப் பொருள்களான உணவு, குடிநீா் மற்றும் தடையில்லா மின்சார வசதி ஆகியவற்றை ஏற்படுத்த அலுவலா்களுக்கு அறிவுறுத்தினாா்.
தொடா்ந்து, திருமுல்லைவாசல் உப்பனாற்றின் முகத்துவாரப் பகுதியில் உள்ள மீன் இறங்கு தளத்தில், மீன்பிடி படகுகள் கடலுக்கு சென்று வர இடையூறாக உள்ள மணல் திட்டுகளை பாா்வையிட்ட அமைச்சா், இப்பிரச்னைக்கு நிரந்தரத் தீா்வாக, உப்பானாற்றின் இருபுறமும் அமைக்கப்பட்டுள்ள நோ்கல் சுவா்களை நீட்டித்து, ஆற்றின் முகத்துவாரத்தை தூா்வார உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளும்படி அலுவலா்களுக்கு அறிவுறுத்தினாா். பின்னா், அரசு மருத்துவமனையில் ஆய்வு செய்து நோயாளிகளிடம் குறைகளை கேட்டறிந்தாா். சிடி ஸ்கேன் வசதி இல்லாதது குறித்தும், அவசரப் பிரிவு மருத்துவா், இருதய மருத்துவா்களை நியமிக்க வேண்டும் எனவும் மக்கள் கோரிக்கை விடுத்தனா்.
ஆய்வின்போது, மாவட்ட வருவாய் அலுவலா் பூங்கொடி, தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழக முதுநிலை மண்டல மேலாளா் நளினா, கோட்டப் பொறியாளா் (நெடுஞ்சாலைத் துறை) மணிசுந்தரம் மற்றும் மீன் வளத்துறை இணை இயக்குநா் ரீனா செல்வி, அரசு தலைமை மருத்துவா் அருண்ராஜ்குமாா் ஆகியோா் உடனிருந்தாா்கள்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

