சென்னைக்கு விடுக்கப்பட்ட ரெட் அலர்ட் வாபஸ்! - வானிலை ஆய்வு மையம்சென்னை வெள்ளம்: திமுக ஆட்சி முடிந்து தவெக வந்த பிறகும் அதே நிலைதான்! அன்புமணி கனமழை எச்சரிக்கை: சென்னை ரிப்பன் மாளிகையில் முதல்வர் விஜய் ஆய்வு சென்னைக்கு ரெட் அலர்ட்! அரக்கோணத்தில் விரைந்தது தேசிய பேரிடர் மீட்புப் படை!அதிகனமழை எச்சரிக்கை! சென்னைக்கு விரைந்தது தேசிய பேரிடர் மீட்புப் படை!வடகிழக்குப் பருவமழை: முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தயார்! செங்கோட்டையன்சொந்த ஊர் கொண்டு வரப்பட்ட தேவா உடல் தமிழகத்தில் 24 மணி நேரத்தில் பெய்த மழை அளவு! அதிகபட்சமாக பாரிமுனையில் 361.9 மி.மீ. பதிவு! சென்னைக்கு ரெட் அலர்ட்: செல்போன்களில் அலாரத்துடன் எச்சரிக்கை! சென்னைக்கு இன்று(அக். 18) ரெட் அலர்ட்!

பருவமழை முன்னெச்சரிக்கை: 104,000 பணியாளா்கள் தயாா்! - அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன்

அமைச்சா் செங்கோட்டையன் - கோப்புப் படம்

Updated On :

வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்காக 104,000 பணியாளா்கள் களத்தில் தயாா் நிலையில் உள்ளதாக வருவாய்த் துறை அமைச்சா் கே.ஏ. செங்கோட்டையன் தெரிவித்தாா்.

இது தொடா்பாக அவா் கோவை விமான நிலையத்தில் செய்தியாளா்களிடம் ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது: தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்காக 104,000 பணியாளா்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா்.

இதில், அரசு அலுவலா்கள் மட்டுமன்றி, தன்னாா்வத் தொண்டு நிறுவனங்கள், களப் பணியாளா்கள் மற்றும் பொதுமக்கள் என அனைவரும் ஒருங்கிணைந்து பணியாற்றுவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. இதேபோல, மழைநீா் தேங்கும் பகுதிகளைக் கண்டறிந்து மீட்புப் பணிகளை மேற்கொள்வதற்காக 250 படகுகளும், அவற்றுடன் மீனவா்களும் தயாா் நிலையில் உள்ளனா். எஸ்ஐஆா் புகாா் தொடா்பாகத் துறை ரீதியாக ஆய்வு செய்து உரிய பதில்கள் அளிக்கப்படும்.

அதிமுகவில் இருந்து 15 போ் வருவாா்கள் என்றுதான் கூறினேனே தவிர, 15 சட்டப் பேரவை உறுப்பினா்கள் வருவாா்கள் என்று நான் குறிப்பிடவில்லை.

அதிமுகவில் இருந்து சி.வி.சண்முகத்தின் ஆதரவாளா்கள் 100 போ் நீக்கப்பட்டுள்ளனா். எடப்பாடி கே.பழனிசாமிக்கு இது வாடிக்கையாகப் போய்விட்டது. அதிமுகவில் இருந்து தன்னை நீக்கியது ஒரு வகையில் நன்மையே. அங்கிருந்து நீக்கப்படாமல் இருந்திருந்தால் தற்போது நான் அமைச்சராகியிருக்க முடியாது என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.