கனமழை எச்சரிக்கை: சென்னை ரிப்பன் மாளிகையில் முதல்வர் விஜய் ஆய்வு சென்னைக்கு ரெட் அலர்ட்! அரக்கோணத்தில் விரைந்தது தேசிய பேரிடர் மீட்புப் படை!அதிகனமழை எச்சரிக்கை! சென்னைக்கு விரைந்தது தேசிய பேரிடர் மீட்புப் படை!வடகிழக்குப் பருவமழை: முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தயார்! செங்கோட்டையன்சொந்த ஊர் கொண்டு வரப்பட்ட தேவா உடல் தமிழகத்தில் 24 மணி நேரத்தில் பெய்த மழை அளவு! அதிகபட்சமாக பாரிமுனையில் 361.9 மி.மீ. பதிவு! சென்னைக்கு ரெட் அலர்ட்: செல்போன்களில் அலாரத்துடன் எச்சரிக்கை! சென்னைக்கு இன்று(அக். 18) ரெட் அலர்ட்!

வடகிழக்குப் பருவமழை: முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தயார்! செங்கோட்டையன்

வடகிழக்குப் பருவமழை பெய்து வரும் நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தயார் நிலையில் இருப்பதாக அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தது குறித்து...

K.A. Sengottaiyan

அமைச்சர் செங்கோட்டையன் - கோப்புப் படம்

Updated On :

வடகிழக்குப் பருவமழை பெய்து வரும் நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தயார் நிலையில் இருப்பதாக அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் வடகிழக்குப் பருவமழை பெய்து வரும் நிலையில், சென்னையில் நேற்று மாலை முதலே விடிய, விடிய கொட்டித்தீர்த்த மழையால், கடந்த 24 மணிநேரத்தில் பாரிமுனையில் 36 செ.மீ. மழை பதிவானதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதைத் தொடர்ந்து, சென்னையில் மேற்கொள்ளப்பட்டு வரும் மழை மற்றும் பேரிடர் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அமைச்சர்கள் ஆதவ் அர்ஜுனா, ராஜ்மோகன் போன்றோர் ஆய்வு செய்து வரும் நிலையில், முதல்வர் விஜய் இன்று ஆய்வு செய்யவுள்ளார்.

இதுகுறித்து கோவை விமான நிலையத்தில் அமைச்சர் செங்கோட்டையன் பேசியதாவது:

பல்வேறு நடவடிக்கைகளை முதல்வர் மேற்கொண்டிருக்கிறார். அதனடிப்படையி,ல், பணிகள் சிறப்பான முறையில் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. ஆகவே, நானும் சென்னைக்கு செல்கிறேன். முதல்வரின் ஒப்புதலோடு 1,04,000 பேர் அதற்கானப் பணிகளில் அமர்த்தப்பட்டுள்ளனர்.

1,04,000 பேர் என்று சொன்னால் தொண்டு நிறுவனங்கள் அதில் பணி செய்பவர்கள் மற்றும் அலுவலர்கள் ஆகியோர் அடங்குவர். அதேபோல, தண்ணீர் எங்கெல்லாம் தேங்குகிறதோ அங்கெல்லாம் படகு வசதி செய்ய வேண்டும் என்பதற்காக 250 படகுகளும் மீனவர்களும் தயார் நிலையில் உள்ளனர் என்று தெரிவித்தார்.

Summary

Minister Sengottaiyan stated that precautionary measures are in place in light of the ongoing northeast monsoon.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.