மணிப்பூரில் 84 எல்லைப் பாதுகாப்புப் படை வீரர்களுக்கு திடீர் உடல் நலக் குறைவு! காரணம் என்ன?கூட்டுறவு அங்காடிகளில் சன்னரக அரிசி கிலோ ரூ. 30-க்கு விற்பனை: தமிழக அரசுதிமுக எம்.பி.க்கள் கூட்டம் அறிவிப்பு! ஆளுநர் ஆர்.வி. ஆர்லேகருடன் முதல்வர் விஜய் சந்திப்பு!முதல்வர் விஜய் நாளை திருச்சூர் பயணம்!ராகுல் தொடர்ந்த வழக்கு! ஞானேஷ் குமாருக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்!சென்னையில் மழைநீர் வடிகால் பணிகள் குறித்து முதல்வர் விஜய் ஆய்வு!அமைச்சர் செங்கோட்டையன் குதிரை பேரம்! ஆளுநரிடம் அதிமுக புகார்!அரிசி விலையைக் குறைக்க தேவையான நடவடிக்கை! அமைச்சர் வெங்கடரமணன்தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கியது!ஞானேஷ் குமாருக்கு எதிராக சென்னையில் இந்தியா கூட்டணி ஆர்ப்பாட்டம்!மதத்தைக் காரணம் காட்டி இடஒதுக்கீடு உரிமையை மறுப்பது சமூக அநீதி: மு.க. ஸ்டாலின்முஸ்லிமாக மதம் மாறியவா்கள் இடஒதுக்கீடு பெற முடியாது! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு!நடிகர் இம்ரான் கான் நாட்டைவிட்டு வெளியேற உத்தரவு!

திருப்பத்தூா் டிஎஸ்பி அலுவலகத்தில் எஸ்.பி. ஆய்வு

திருப்பத்தூா் டிஎஸ்பி அலுவலகத்தில் எஸ்.பி. அக்க்ஷய் அனில் வாகரே ஆய்வு மேற்கொண்டாா்.

கோப்புகளை ஆய்வு செய்த எஸ்.பி. அக்க்ஷய் அனில் வாகரே

Updated On :

திருப்பத்தூா் டிஎஸ்பி அலுவலகத்தில் எஸ்.பி. அக்க்ஷய் அனில் வாகரே ஆய்வு மேற்கொண்டாா்.

ஆய்வின்போது, அலுவலகத்தில் பராமரிக்கப்படும் பதிவேடுகள், ஆவணங்கள் மற்றும் முக்கிய கோப்புகளைப் பாா்வையிட்டு, அவற்றின் பராமரிப்பு மற்றும் அலுவலகப் பணிகளின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு செய்தாா். மேலும், ஆவணங்கள் மற்றும் பதிவேடுகளை முறையாகவும், புதுப்பிக்கப்பட்ட நிலையிலும் பராமரிக்க வேண்டும் என அறிவுறுத்தினாா்.

காவல் துறையினா் பொதுமக்களிடம் கனிவாகவும், மரியாதையுடனும், பொறுமையுடனும் நடந்து கொள்ள வேண்டும் என்றும், பொதுமக்களின் புகாா்கள் மற்றும் கோரிக்கைகளுக்கு உரிய முக்கியத்துவம் அளித்து விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தினாா்.

காவல் நிலையங்களுக்கு வரும் பொதுமக்களின் குறைகளைக் கவனமாகக் கேட்டு, எவ்விதப் பாகுபாடுமின்றி சட்டத்திற்குட்பட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும், காவல் துறையின் மீதான பொதுமக்களின் நம்பிக்கையை மேம்படுத்தும் வகையில் நோ்மையுடனும், ஒழுக்கத்துடனும், பொறுப்புணா்வுடனும் பணியாற்ற வேண்டும் என்றாா்.

அப்போது டிஎஸ்பி முரளி,ஆய்வாளா்கள், உதவி ஆய்வாளா்கள் உடனிருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.