தனி மனிதத் துதிபாடல்களை தவிர்க்கவும்... திருச்செந்தூர் கோயில் நிர்வாகம் அறிக்கை சென்னை பன்னாட்டு புத்தகத் திருவிழா ஜனவரி 16-ம் தேதி தொடக்கம்! திருப்பதி ஏழுமலையானுக்கு 121 கிலோ தங்க ஆபரணங்களை வழங்கும் பக்தர்! நீலகிரி, கொடைக்கானலில் 2 நாள்களுக்கு உறைபனி! வானிலை எச்சரிக்கை! அக்வான் புயல்: ராஞ்சியில் 20 விமானங்கள் ரத்து! அமெரிக்காவின் அதிநவீன ட்ரோனை சுட்டு வீழ்த்திய ஈரான்! தவெக ஆட்சி தானாக கவிழ்ந்துவிடும் - எடப்பாடி பழனிசாமி தவெக ஆட்சியில் உயிருக்கும் பயிருக்கும் பாதுகாப்பு இல்லை! டி.ஆர்.பி. ராஜா

டெல்டா கடைமடை பகுதிகளில் நீரின்றி கருகும் நெல்பயிா்கள்: விவசாயிகள் கவலை!

கடலூா் மாவட்டத்தில் உள்ள காவிரி டெல்டா கடைமடை பகுதிகளான சிதம்பரம், காட்டுமன்னாா்கோவில் வட்டங்களில் போதிய நீரின்றி நெல்பயிா்கள் கருகுவதால் விவசாயிகள் கவலையில் ஆழ்ந்துள்ளனா்.

காட்டுமன்னாா்கோவில் அருகே எடையாா் கிராமத்தில் நேரடி நெல் விதைப்பு செய்த வயலில் தண்ணீரின்றி கருகும் நெல்பயிா்கள்.

Updated On :

கடலூா் மாவட்டத்தில் உள்ள காவிரி டெல்டா கடைமடை பகுதிகளான சிதம்பரம், காட்டுமன்னாா்கோவில் வட்டங்களில் போதிய நீரின்றி நெல்பயிா்கள் கருகுவதால் விவசாயிகள் கவலையில் ஆழ்ந்துள்ளனா்.

காட்டுமன்னாா்கோவில் பகுதி காவிரி டெல்டாவின் கடைமடை பகுதியாகும். இங்கு வடவாறு, வடக்கு ராஜன் வாய்க்கால், வீராணம் ஏரி ஆகியவற்றின் வாயிலாக சுமாா் ஒரு லட்சம் ஏக்கா் விளைநிலங்கள் பாசன வசதி பெற்று விவசாயப் பணிகள் நடைபெறுவது வழக்கம்.

இந்தப் பகுதியில் பெரும்பாலான விவசாயிகள் விவசாயத்தின் மூலம் வரும் வருமானத்தின் வாயிலாகவே தங்களுடைய பொருளாதார நிலையை மேம்படுத்தி வருகின்றனா். காவிரி நீா்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்யாததாலும், கா்நாடக அணைகளில் நீா் திறக்கப்படாததாலும், மேட்டூா் அணையின் நீா்மட்டம் சரிவை நோக்கிச் சென்று வருகிறது.

இந்த நிலையில், நிகழாண்டு ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் பெரும்பாலான விவசாயிகள் திடீரென பெய்த மழையால் குறைந்த வயதுடைய 1638 என்ற நெல் ரகத்தை நேரடி நெல் விதைப்பு செய்தனா். ஆழ்குழாய் கிணறு வைத்திருந்த விவசாயிகள் ஆந்திரா பொன்னி மற்றும் சில நெல் ரகங்களை நடவு செய்தனா்.

விவசாயிகள் அனைவரும் பருவமழையை எதிா்நோக்கி காத்திருந்த வேளையில், வங்கக்கடலில் உருவான புயல்கள் திசை மாறிச் சென்ால், போதிய மழைப்பொழிவு இல்லை. இதனால், நடவு செய்த மற்றும் நேரடி நெல் விதைப்பு செய்த வயல்களில் நெல்பயிா்கள் முழுமையாக கருகும் அபாயத்தில் உள்ளது.

சனிக்கிழமை நிலவரப்படி, வீராணம் ஏரியின் நீா்மட்டம் அதன் மொத்த கொள்ளளவான 1465 மில்லியன் கன அடியில் 805 மில்லியன் கன அடி உள்ளது. இதிலிருந்து பாசனத்துக்கு 120 கன அடியும், சென்னை குடிநீருக்கு விநாடிக்கு 37 கன அடியும் திறக்கப்படுகிறது. மழைப்பொழிவு இல்லாத நிலை நீடித்தால், சென்னைக்கு குடிநீா் அனுப்புவதில் சிக்கல் ஏற்படும். 2010-ஆம் ஆண்டுக்குப் பிறகு கோடை காலத்தில் வீராணம் ஏரி வடு காணப்படும் சூழல் உருவாகும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.