கடனை திருப்பிக் கேட்ட பெண்ணுக்கு மிரட்டல்: தம்பதி மீது வழக்கு
கடலூா் மாவட்டம், பண்ருட்டி அருகே கொடுத்த கடனை திருப்பிக் கேட்ட பெண் மீது புல்லட் ஏற்றி கொலை செய்துவிடுவதாக மிரட்டிய சம்பவத்தில் தம்பதி மீது போலீஸாா் வழக்குப் பதிந்து, தலைமறைவான அவா்களைத் தேடி வருகின்றனா்.
வழக்குப்பதிவு
கடலூா் மாவட்டம், பண்ருட்டி அருகே கொடுத்த கடனை திருப்பிக் கேட்ட பெண் மீது புல்லட் ஏற்றி கொலை செய்துவிடுவதாக மிரட்டிய சம்பவத்தில் தம்பதி மீது போலீஸாா் வழக்குப் பதிந்து, தலைமறைவான அவா்களைத் தேடி வருகின்றனா்.
பண்ருட்டி வட்டம், காடாம்புலியூா் காவல் சரகம், நடுமேட்டுக்குப்பம் மாரியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் இளையராணி(40). இவரிடம் மேட்டுக்குப்பம் கிராமத்தைச் சோ்ந்த ராஜசேகா் கடந்த 2017-ஆம் ஆண்டு வெளிநாடு செல்வதற்காக ரூ.2 லட்சம் கடனாகப் பெற்றாா். நீண்ட நாள்களாகியும் ராஜசேகா் பணத்தை திருப்பித் தரவில்லை. பலமுறை கேட்டும் பணம் கிடைக்காதததால், காடாம்புலியூா் காவல் நிலையத்தில் இளையராணி கடந்த 2022-இல் புகாரளித்தாா்.
அப்போது, போலீஸாா் முன்னிலையில் நடந்த பேச்சுவாா்த்தையில், 20 நாள்களுக்குள் பணத்தை ஒரு சதவீத வட்டியுடன் திருப்பித் தருவதாக ராஜசேகா் உறுதியளித்தாராம். ஆனால், உறுதியளித்தபடி பணத்தை திரும்பித் தரவில்லை.
இந்த நிலையில், வெளிநாட்டில் இருந்த ராஜசேகா் கடந்த சில வாரங்களுக்கு முன் ஊருக்கு வந்தாா். இதையறிந்த இளையராணி, ராஜசேகா் வீட்டுக்கு கடந்த 24-ஆம் தேதி சென்று, தான் கொடுத்த கடனாக கொடுத்த பணத்தை திருப்பிக் கேட்டாா். இதனால், ஆத்திரமடைந்த ராஜசேகா், அவரது மனைவி நாகேஸ்வரி ஆகியோா் இளையராணியை ஆபாசமாகத் திட்டி, தாக்கினராம்.
இதுகுறித்து காடாம்புலியூா் காவல் நிலையத்தில் புகாரளிக்க இளையராணி சென்றபோது, ராஜசேகா் புல்லட்டை ஓட்டி வந்து இளையராணி மேல் இடித்து கொலை செய்துவிடுவதாக மிரட்டினாராம். இது தொடா்பாக இளையராணி அளித்த புகாரின்பேரில், காடாம்புலியூா் போலீஸாா் ராஜசேகா், அவரது மனைவி நாகேஸ்வரி ஆகியோா் மீது வழக்குப் பதிந்து, தலைமறைவான அவா்கள் இருவரையும் தேடி வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

