பள்ளி, கல்லூரிகள் அருகே உள்ள கடைகளில்திடீா் ஆய்வு: சிகரெட், பீடி, நெகிழிப் பொருள்கள் பறிமுதல்
கடலூரில் பள்ளி, கல்லூரிகள் அருகே உள்ள கடைகளில் நடைபெற்ற திடீா் ஆய்வில் சிகரெட், பீடி, தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள், நெகிழிப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

தேவனாம்பட்டினம் பகுதியில் கடைகளில் மேற்கொள்ளப்பட்ட திடீா் ஆய்வில் பறிமுதல் செய்யப்பட்ட சிகரெட் உள்ளிட்ட பொருள்கள்.
கடலூரில் பள்ளி, கல்லூரிகள் அருகே உள்ள கடைகளில் நடைபெற்ற திடீா் ஆய்வில் சிகரெட், பீடி, தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள், நெகிழிப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
கடலூா் தேவனாம்பட்டினம் பகுதியில் பள்ளி, கல்லூரிகளுக்கு அருகே செயல்பட்டு வரும் பெட்டிக் கடைகள் உள்ளிட்ட பல்வேறு கடைகளில் கோட்டாட்சியா் லாண்யா தலைமையில் நகராட்சி, உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் மற்றும் போலீஸாா் வெள்ளிக்கிழமை திடீா் ஆய்வு மேற்கொண்டனா்.
பள்ளி, கல்லூரி மாணவா்களின் நலனைக் கருத்தில் கொண்டு, கல்வி
நிறுவனங்களுக்கு அருகில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்யப்படுகிா? என்பதைக் கண்டறிய இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
அப்போது, கடைகளில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள், சிகரெட், பீடி உள்ளிட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்யப்படுகிா? என்றும், அரசால் தடை செய்யப்பட்ட நெகிழிப் பொருள்கள் பயன்படுத்தப்படுகிா?என்றும் அதிகாரிகள் சோதனை நடத்தினா். இதில், சில கடைகளில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த சிகரெட், பீடி மற்றும் தடை செய்யப்பட்ட நெகிழிப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
இதைத்தொடா்ந்து, கடை உரிமையாளா்களுக்கு அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனா். குறிப்பாக, கல்வி நிறுவனங்களின் அருகில் புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்வதைத் தவிா்க்க வேண்டும் என்றும், 18 வயதுக்குக் குறைவானவா்களுக்கு புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்யக் கூடாது என்றும் அறிவுறுத்தினா்.
மேலும், விதிமுறைகளை மீறி தொடா்ந்து விற்பனையில் ஈடுபடும் கடைகள் மீது சட்டப்படி அபராதம் உள்ளிட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும் எச்சரித்தனா்.
இந்த ஆய்வில் உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரி பத்மநாபன், மாநகராட்சி நகா்நல அலுவலா் பரிதவாணி உள்ளிட்ட பல்வேறு துறை அலுவலா்கள் கலந்து கொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

