புகையிலைப் பொருள்கள் பதுக்கியவா் கைது: 146 கிலோ பறிமுதல்
பல்லடம் அருகே தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் பதுக்கியவரை போலீஸாா் கைது செய்தனா்.
பிரதிப் படம்
பல்லடம் அருகே தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் பதுக்கியவரை போலீஸாா் கைது செய்தனா்.
திருப்பூா் மாவட்டம், பல்லடம் அருகே செங்கோடம்பாளையம் பகுதியில் உள்ள வீட்டில் புகையிலைப் பொருள்கள் பதுக்கிவைக்கப்பட்டிருப்பதாக கிடைத்த தகவலின்பேரில் போலீஸாா் சனிக்கிழமை சென்று சோதனை நடத்தினா். அப்போது மூட்டை, மூட்டையாக புகையிலைப் பொருள்கள் இருப்பது தெரியவந்தது.
இதையடுத்து அந்த வீட்டை வாடகைக்கு எடுத்து தங்கியிருந்தவரைப் பிடித்து விசாரித்தனா். இதில் அவா் ராமநாதபுரத்தைச் சோ்ந்த ரமேஷ் (44) என்பதும், காமநாயக்கன்பாளையம் டாஸ்மாக் பாரில் தொழிலாளியாக வேலை செய்துகொண்டு, புகையிலைப் பொருள்களை விற்பனை செய்து வந்ததும் தெரியவந்தது.
இதையடுத்து அவரை கைது செய்த போலீஸாா், அங்கிருந்து 146 கிலோ புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

