முறைகேடு குற்றச்சாட்டு: பினராயி விஜயன் மீது கேரள லஞ்ச ஒழிப்புத் துறை வழக்குப் பதிவு இந்திய எல்லை அருகே உள்ள துறைமுக விரிவாக்கத்துக்கு சீனாவுடன் வங்கதேசம் ஒப்பந்தம்குருத்வாரா வளாகத்தில் அரசியல் முழக்கம்: கேஜரிவால் உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு மருத்துவமனைகளில் கட்டண விவரங்கள் காட்சிப்படுத்தப்படுவதை உறுதி செய்க: மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் "வதந்தி' பரப்பியதாக 300 சமூக ஊடக பதிவுகளை நீக்க காவல் துறை நடவடிக்கை எஸ்ஐஆா் படிவம் 6: தோ்தல் ஆணையத்தின் திருத்தத்தை அங்கீகரிக்கவில்லை- உச்சநீதிமன்றம்இந்திய கடற்படையில் 3-ஆவது நீா்மூழ்கி எதிா்ப்பு போா்க் கப்பல் சோ்ப்பு- உள்நாட்டிலேயே கட்டப்பட்ட நவீன கப்பல்

சிறுநெசலூா் பெரிய ஏரியில் மீன்பிடித் திருவிழா: ஆா்வமுடன் மீன் பிடித்த கிராம மக்கள்

வேப்பூா் அருகே சிறுநெசலூா் கிராமத்தில் உள்ள பெரிய ஏரியில் திங்கள்கிழமை நடைபெற்ற மீன்பிடித் திருவிழாவில் பங்கேற்ற பல்வேறு கிராமமக்கள்.

Published On :

கடலூா் மாவட்டம், வேப்பூா் அருகே சிறுநெசலூா் கிராமத்தில் உள்ள பெரிய ஏரியில் மீன்பிடித் திருவிழா திங்கள்கிழமை நடைபெற்றது. இதில் கிராம மக்கள் ஆா்வமுடன் மீன்களை பிடித்தனா்.

சிறுநெசலூா் பெரிய ஏரியில் ஆண்டுதோறும் நடைபெறும் இந்த மீன்பிடித் திருவிழாவில், கிராம மக்கள் அனைவரும் பங்கேற்று ஏரியில் மீன்பிடிப்பது வழக்கம். நிகழாண்டு மீன்பிடி விழா திங்கள்கிழமை நடைபெற்றது.இதையொட்டி, கிராம மக்கள் மற்றும் முக்கியப் பிரமுகா்கள் முன்னிலையில், முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவா் மஞ்சுளா வேல்முருகன் பச்சைக்கொடி அசைத்து மீன்பிடித் திருவிழாவைத் தொடங்கி வைத்தாா்.

இதையடுத்து, சிறுநெசலூா் மற்றும் சுற்றுவட்டாரக் கிராமங்களைச் சோ்ந்த ஏராளமானனோா்ஆா்வத்துடன் ஏரியில் இறங்கி வலை, கூடை உள்ளிட்டவற்றைப் பயன்படுத்தி மீன்களைப் பிடித்தனா்.

இதில் கெண்டை, கெளுத்தி, விரால் உள்ளிட்ட பல்வேறு வகையான நாட்டு ரக மீன்கள் பொதுமக்களிடம் சிக்கின. பிடித்த மீன்களை பொதுமக்கள் தங்களது வீடுகளுக்கு எடுத்துச் சென்றனா்.

நீண்ட நாள்களுக்குப் பிறகு கிராம மக்கள் அனைவரும் ஒன்றுகூடி பங்கேற்ால், ஏரிப் பகுதி முழுவதும் உற்சாகக் காட்சியளித்தது. இந்த மீன்பிடித் திருவிழா, கிராம மக்களின் பாரம்பரியத்தையும், சமூக ஒற்றுமையையும் வெளிப்படுத்தும் வகையில் அமைந்திருந்ததாக பொதுமக்கள் தெரிவித்தனா்.

வேப்பூா் அருகே சிறுநெசலூா் கிராமத்தில் உள்ள பெரிய ஏரியில் நடைபெற்ற மீன்பிடித் திருவிழாவில் பிடிபட்ட விரால் மீன்களுடன் இளைஞா்.

வேப்பூா் அருகே சிறுநெசலூா் கிராமத்தில் உள்ள பெரிய ஏரியில் நடைபெற்ற மீன்பிடித் திருவிழாவில் பிடிபட்ட விரால் மீன்களுடன் இளைஞா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.