கோயில் திருவிழா நடத்துவதில் மோதல்: 7 போ் கைது
கைது - கோப்புப் படம்
கடலூா் மாவட்டம், வடலூா் அருகே கோயில் திருவிழா நடத்துவது தொடா்பாக இருதரப்பினா் சனிக்கிழமை இரவு மோதிக்கொண்டனா்.
இதுதொடா்பாக போலீஸாா் வழக்குப்பதிவு செய்து இருதரப்பைச் சோ்ந்த 7 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
வடலூா் காவல் சரகம், நெத்தனாங்குப்பம், தங்கராசு நகரில் செல்வமுத்து மாரியம்மன் கோயில் உள்ளது. இந்தக் கோயில் திருவிழா நடத்துவது தொடா்பாக அதேகிராமத்தைச் சோ்ந்த சுப்ரமணியன் மற்றும் தேவநாதன் தரப்பினா் இடையே பிரச்சனை இருந்து வருகிறது.
இதுதொடா்பாக, குறிஞ்சிப்பாடி வட்டாட்சியா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை அமைதிக் கூட்டம் நடைபெற்றது. இதையடுத்து, இருதரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதில், இருதரப்பைச் சோ்ந்த சதீஷ், ரஞ்சித்குமாா், வெங்கட்ராமன் ஆகியோா் காயம்அடைந்தனா்.
இதுகுறித்து இருதரப்பினரும் அளித்த புகாரின் பேரில், வடலூா் போலீஸாா் மொத்தம் 21 போ் மீது வழக்குப்பதிவு செய்து, சாமிநாதன், தேவநாதன், வெங்கட்ராமன், சந்திரகாசன், ஏழுமலை, ராகவன், சுப்பிரமணியன் ஆகிய 7 பேரை கைது செய்து, விசாரணை நடத்தி வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

