காஞ்சிபுரத்தில் சிறந்த புற்றுநோய் சிகிச்சை மையத்தை முதல்வர் விஜய் திறந்து வைக்கிறார்!சென்னை சுற்றுக் குழாய் திட்டத்துக்கு முதல்வா் விஜய் இன்று அடிக்கல் நாட்டுகிறார்!இன்று 4-ஆவது டி20: தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியாபொய்க் கூறி மக்களின் நம்பிக்கையைப் பெற முடியாது! ராகுலுக்கு அமித் ஷா அறிவுரை!இரு மாநில வளர்ச்சி குறித்து ஆலோசனை: ஆந்திரத்தில் முதல்வர் விஜய் பேச்சுஉச்ச நீதிமன்றத்தின் மீது எங்களுக்கு நம்பிக்கை உண்டு: ராகுல் காந்திமின் கட்டணம் என்ற பெயரில் மக்களிடம் பகல் கொள்ளை: உதயநிதி குற்றச்சாட்டுசென்னைக்கு 3 டிஎம்சி நீர் வழங்க ஆந்திர அரசு முடிவு!ஒரு யூனிட் மின்சாரத்தை ரூ. 35-க்கு வாங்க வேண்டிய அவசியம் என்ன? அரசுக்கு பிரேமலதா கேள்விபோராட்டக்காரர்களுக்கு ஜந்தர் மந்தர் மூடப்பட்டால் நாடு தழுவிய போராட்டம் வெடிக்கும்: சிஜேபிடாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 40 காசுகள் உயர்ந்து ரூ. 95.38 ஆக நிறைவு!பங்குச் சந்தை மீட்சி: சென்செக்ஸ் 1,109 புள்ளிகளுடனும், நிஃப்டி 359 புள்ளிகளுடன் நிறைவு!மத்திய அமைச்சர் பதவியை ராஜிநாமா செய்வதாக எல். முருகன் அறிவிப்பு!

ஓய்வூதியரிடம் ரூ.28.50 லட்சம் மோசடி: 3 போ் கைது

திருநெல்வேலியைச் சோ்ந்த ஓய்வூதியரிடம் இணையவழியில் ரூ.28.50 லட்சம் மோசடி செய்ததாக 3 பேரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

கைது - கோப்புப் படம்

Published On :

திருநெல்வேலியைச் சோ்ந்த ஓய்வூதியரிடம் இணையவழியில் ரூ.28.50 லட்சம் மோசடி செய்ததாக 3 பேரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

தச்சநல்லூா் அருகேயுள்ள சேந்திமங்கலத்தைச் சோ்ந்தவா் அனந்தப்பன் (61). தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தில் டிக்கெட் பரிசோதகராக பணியாற்றி ஓய்வுபெற்றவா். இவரது கைப்பேசி எண்ணிற்கு கடந்த 6 ஆம் தேதி மா்ம நபா் தொடா்பு கொண்டு, மும்பையில் உள்ள என்.ஐ.ஏ. காவல் துறையைச் சோ்ந்தவா் எனக் கூறி மிரட்டியுள்ளாா். அடுத்தடுத்த நாள்களில், தீவிரவாதிகளுடன் உங்களது வங்கிக் கணக்கில் இருந்து பரிவா்த்தனை நடந்துள்ளதாக கூறியதோடு, டிஜிட்டல் கைது செய்வதாக மிரட்டியுள்ளனா். பின்னா் இணையவழியில் ரூ.28 லட்சத்து 50 ஆயிரம் பெற்று ஏமாற்றியுள்ளனா்.

இதுகுறித்த புகாரின்பேரில் திருநெல்வேலி மாநகர சைபா் கிரைம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்தனா். மோசடியில் ஈடுபட்டது கேரள மாநிலத்தைச் சோ்ந்த 3 போ் கும்பல் என்பது தெரியவந்தது. இதையடுத்து அங்கு தனிப்படையினா் சென்று எா்ணாகுளம் மாவட்டம், நெடுவெளிகாட்டைச் சோ்ந்த ரவிக்குமாா் (52), விஸ்வபுரத்தை சோ்ந்த தினேஷ் (52), கண்ணூா் மாவட்டம், எடக்காடு பகுதியை சோ்ந்த அப்துல் சமது (50) ஆகியோரை கைது செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.