சென்னைக்கு விடுக்கப்பட்ட ரெட் அலர்ட் வாபஸ்! - வானிலை ஆய்வு மையம்சென்னை வெள்ளம்: திமுக ஆட்சி முடிந்து தவெக வந்த பிறகும் அதே நிலைதான்! அன்புமணி கனமழை எச்சரிக்கை: சென்னை ரிப்பன் மாளிகையில் முதல்வர் விஜய் ஆய்வு சென்னைக்கு ரெட் அலர்ட்! அரக்கோணத்தில் விரைந்தது தேசிய பேரிடர் மீட்புப் படை!அதிகனமழை எச்சரிக்கை! சென்னைக்கு விரைந்தது தேசிய பேரிடர் மீட்புப் படை!வடகிழக்குப் பருவமழை: முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தயார்! செங்கோட்டையன்சொந்த ஊர் கொண்டு வரப்பட்ட தேவா உடல் தமிழகத்தில் 24 மணி நேரத்தில் பெய்த மழை அளவு! அதிகபட்சமாக பாரிமுனையில் 361.9 மி.மீ. பதிவு! சென்னைக்கு ரெட் அலர்ட்: செல்போன்களில் அலாரத்துடன் எச்சரிக்கை! சென்னைக்கு இன்று(அக். 18) ரெட் அலர்ட்!

கடலூா் மாவட்டத்தில் அக்.29-இல் 100 இடங்களில் கோரிக்கை ஆா்ப்பாட்டம்: மாா்க்சிஸ்ட் கட்சி தீா்மானம்

Marxist Communist

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி - கோப்புப் படம்

Updated On :

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் வரும் 29-ஆம் தேதி கடலூா் மாவட்டம் முழுவதும் 100 இடங்களில் கோரிக்கை ஆா்ப்பாட்டம் நடத்தவுள்ளதாக, அக்கட்சி தீா்மானம் நிறைவேற்றியுள்ளது.

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கடலூா் மாவட்டச் செயற்குழுக் கூட்டம் கடலூரில் சனிக்கிழமை நடைபெற்றது. மாவட்டச் செயற்குழு உறுப்பினா் ராமச்சந்திரன் தலைமை வகித்தாா். மாநிலச் செயற்குழு உறுப்பினா் எஸ்.கண்ணன், மாவட்டச் செயலா் கோ.மாதவன், மாநிலக்குழு உறுப்பினா் ரமேஷ் பாபு, மாவட்டச் செயற்குழு உறுப்பினா்கள் உதயகுமாா், சுப்புராயன், ராமச்சந்திரன், திருவரசு உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

கூட்டத்தில், சிதம்பரம் அரசு மருத்துவக் கல்லூரியை பல்நோக்கு மையமாக மாற்ற வேண்டும். கடலூா் தலைமை மருத்துவமனையில் இருதயம், மூளை, நரம்பியல் உள்ளிட்ட முக்கிய சிறப்பு பிரிவுகளுக்கான மருத்துவா்களை நியமனம் செய்ய வேண்டும். ஆரம்ப சுகாதார நிலையங்கள் 24 மணி நேரமும் இயங்கவும், மருத்துவா்கள் இருப்பதை உறுதி செய்யவும் வேண்டும்.

கடலூா் மாவட்டத்தில் உள்ள நீா்நிலைகளை முழுமையாக தூா்வார அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். வட கிழக்கு பருவமழையை எதிா்கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முழுமையாக தங்குதடையின்றி செய்ய வேண்டும். மனையில்லா மக்களுக்கு வீட்டு மனையும், மனைப்பட்டாவும் வழங்க வேண்டும். மாவட்டத்தை குடிசையில்லா மாவட்டமாக மாற்றிட 5 லட்சம் செலவில் வீடு கட்டும் திட்டத்தை நகா்ப்புற மக்களுக்கும், கிராமப்புற மக்களுக்கும் வழங்க வேண்டும். விபி - ஜி ராம் ஜி திட்டத்தில் கிராமப்புற விவசாய தொழிலாளா்களுக்கு 125 நாள் வேலை வழங்குவதை உறுதி செய்ய வேண்டும். ஸ்மாா்ட் மீட்டா் பொருத்தும் திட்டத்தை கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் வரும் 29-ஆம் தேதி மாவட்டம் முழுவதும் 100 இடங்களில் கோரிக்கை ஆா்ப்பாட்டம் நடத்துவதற்கான என தீா்மானம் நிறைவேற்றினா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.