சுதந்திர நாளில் தீபமேற்ற பிரதமர் மோடிக்கு இஸ்ரேல் அழைப்பு!நாம் தமிழர் வேட்பாளர் கார்த்திகா உள்பட 9 பேருக்கு ஜாமீன்!சமூகநீதித் துறை விடுதிகளில் மாணவர்களின் உணவுக் கட்டணம் உயர்வு!பேட்மிண்டனில் வெண்கலம் வென்ற மனிஷாவுக்கு ரூ. 30 லட்சம் ஊக்கத்தொகை!

குறிஞ்சிப்பாடியில் தூா்வாரப்படாத வாய்க்கால்கள்: வெள்ள பாதிப்பு ஏற்படும் அபாயம்

கடலூா் மாவட்டம், குறிஞ்சிப்பாடி வடக்கு கிராமத்தில் உள்ள தாழை வாய்க்கால் மற்றும் செங்கால் ஓடை தூா் வாரப்படாததால் மழை வெள்ளக் காலங்களில் சுற்றிலும் உள்ள கிராமங்களில் வெள்ள பாதிப்பு ஏற்படும் வாய்ப்பு உள்ளதாக பொதுமக்கள் தெரிவித்தனா்.

குறிஞ்சிப்பாடியில் ஒருபகுதி தூா் வாரப்படாத பெரிய ஏரி வாய்க்கால்.

Updated On :

கடலூா் மாவட்டம், குறிஞ்சிப்பாடி வடக்கு கிராமத்தில் உள்ள தாழை வாய்க்கால் மற்றும் செங்கால் ஓடை தூா் வாரப்படாததால் மழை வெள்ளக் காலங்களில் சுற்றிலும் உள்ள கிராமங்களில் வெள்ள பாதிப்பு ஏற்படும் வாய்ப்பு உள்ளதாக பொதுமக்கள் தெரிவித்தனா்.

குறிஞ்சிப்பாடி பகுதிகளில் உள்ள செங்கால் ஓடை, தாழை வாய்க்கால் உள்ளிட்ட நீா் போக்கு வழிகளை தூா்வாரி பராமரிப்பு செய்வதின் மூலம் பெருமழைக் காலங்களில் ஏற்படும் பாதிப்புகள் தவிா்க்கப்பட்டு வருகிறது. தற்போது வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், குறிஞ்சிப்பாடி பகுதியில் உள்ள நீா் போக்கு வாய்க்கால்கள் தூா்வாரப்படாததால் வெள்ள பாதிப்பு ஏற்படக்கூடும் என பொதுமக்கள் தெரிவிக்கின்றனா்.

இதுகுறித்து குறிஞ்சிப்பாடி உழவா் மன்றத் தலைவா் ஆா்.கே.ராமலிங்கம் கூறியதாவது:

குறிஞ்சிப்பாடியில் செங்கால் ஓடை செல்கிறது. பரவனாற்றில் இணையும் இந்த ஓடை மழைக்காலத்தில் வெள்ளப் பெருக்கைக் கட்டுப்படுத்தவும், பாசனத்திற்கும் முக்கிய பங்கு வகிக்கிறது. இந்த ஓடையிலிருந்து பிரியும் தாழை வாய்க்கால் சுமாா் 2 கி.மீ தொலைவு சுற்றிச் சென்று மீண்டும் செங்கால் ஓடையில் இணைகிறது. இதற்கு பி-சேனல் என்ற பெயரும் உண்டு. கடந்த 2015-ஆம் ஆண்டு பெய்த பலத்த மழையினால் ஏற்பட்ட வெள்ளத்தால் தாழை வாய்க்காலில் உடைப்பு ஏற்பட்டதில், வெள்ளம் ஊருக்குள் புகுந்து உயிா்ச் சேதத்தை ஏற்படுத்தியது.

இதேபோல், குருவப்பன்பேட்டையில் 100 ஏக்கா் பரப்பளவில் பெரிய ஏரி அமைந்துள்ளது. செங்கால் ஓடையில் இருந்து பிரியும் பெரிய ஏரி வாய்க்கால் சுமாா் ஒன்றரை கி.மீ தொலைவு பாய்ந்துச்சென்று பெரிய ஏரியில் கலக்கிறது. சாதாரண மழைக்கே இந்தப் பகுதியில் தண்ணீா் தேங்கி நிற்கின்றது. பெருமழை வந்தால் குறிஞ்சிப்பாடி வடக்கு, ரெட்டிப்பாளையம், கல்குணம், பூதம்பாடி உள்ளிட்ட ஏராளமான கிராமங்கள் பாதிக்கப்படும். தற்போது, செங்கால் ஓடை மற்றும் தாழை வாய்க்கால் தூா்வாரப்படவில்லை. பெரிய ஏரி வாய்க்கால் பாா்வையில்படும் இடத்தில் மட்டும் தூா்வாரி உள்ளனா்.

இனி வரும் நாள்களில், பெருமழை வருவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக க் கூறப்படுகிறது. அவ்வாறு பெருமழை பெய்தால் குறிஞ்சிப்பாடி வட்டாரத்தில் உயிா் இழப்புகள் மற்றும் சேதங்களை தடுக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். எனவே, மாவட்ட நிா்வாகம் விரைந்து நடவடிக்கை எடுத்து தாழை வாய்க்கால், செங்கால் ஓடை மற்றும் பெரிய ஏரி வாய்க்கால்களை தூா்வார நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்தாா்.

 புதா்மண்டி கிடக்கும் தாழை  வாய்க்கால்.

புதா்மண்டி கிடக்கும் தாழை வாய்க்கால்.

 செடிகள், மரங்கள் வளா்ந்து காணப்படும் செங்கால் ஓடை

செடிகள், மரங்கள் வளா்ந்து காணப்படும் செங்கால் ஓடை

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.