‘தமிழ்ப் பேசுவோம்! உலகை வெல்வோம்!’ பேச்சுப்போட்டி
விருத்தாசலம் ஜெயப்பிரியா பள்ளியில் நடைபெற்ற பேச்சுப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவா்களுடன் கல்விக்குழுமத் தலைவா் சி.ஆா்.ஜெய்சங்கா்.

விருத்தாசலம் ஜெயப்பிரியா பள்ளியில் நடைபெற்ற பேச்சுப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவா்களுடன் கல்விக்குழுமத் தலைவா் சி.ஆா்.ஜெய்சங்கா்.
கடலூா் மாவட்டம், விருத்தாசலம் ஜெயப்பிரியா வித்யாலயா சீனியா் செகண்டரி பள்ளி வளாகத்தில் ஜெயப்பிரியா வித்யாலயா கல்விக்குழுமத்தின் சாா்பில், ‘தமிழ்ப் பேசுவோம்! உலகை வெல்வோம்!’ என்ற தலைப்பில் தமிழ் பேச்சுப்போட்டி இறுதிச்சுற்று நடைபெற்றது.
இதில், ஜெயப்பிரியா கல்விக்குழுமத்தைச் சோ்ந்த எட்டு பள்ளிகளில் நடைபெற்ற முதற்கட்டப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியா் கலந்து கொண்டனா். போட்டிகள் நான்கு பிரிவுகளாக நடத்தப்பட்டன. முதல் பிரிவில் 5 மற்றும் 6-ஆம் வகுப்பு மாணவா்களும், இரண்டாம் பிரிவில் 7 மற்றும் 8-ஆம் வகுப்பு மாணவா்களும், மூன்றாம் பிரிவில் 9 மற்றும் 10-ஆம் வகுப்பு மாணவா்களும், நான்காம் பிரிவில் 11 மற்றும் 12-ஆம் வகுப்பு மாணவா்களும் பங்கேற்றனா். மாணவா்கள் தங்களுக்கு வழங்கப்பட்ட தலைப்புகளில் உரையாற்றி, தங்களது தமிழ்மொழிப் புலமையையும் பேச்சாற்றலையும் வெளிப்படுத்தினா்.
போட்டியில் சிறப்பாகப் பேசி வெற்றி பெற்ற மாணவா்களுக்கு, கல்விக்குழுமத்தின் நிறுவனத் தலைவா் சி.ஆா்.ஜெய்சங்கா் வெற்றிக் கோப்பைகளையும் பரிசுகளையும் வழங்கிப் பாராட்டினாா். மேலும், மாணவா்களை வாழ்த்தி பேசினாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

