ஐரோப்பாவின் பல நாடுகளில் மக்கள் போராட்டம்!இந்திய அரிசி ஏற்றுமதி 13% அதிகரிப்பு!6 மாதங்களில் 23 பேருக்கு மரண தண்டனை விதித்த நீதிபதி: குடும்ப நல நீதிமன்றத்துக்கு மாற்றம்!அமித் ஷா குறித்து ராகுல் அவதூறாகப் பேசிய வழக்கு: உ.பி. நீதிமன்றம் இன்று தீர்ப்புதமிழகத்தில் தொடா் பலத்த மழை: இன்று உருவாகிறது ‘அா்னாப்’ புயல்!கடந்த 2 ஆண்டுகளில் நடைபெற்ற பேரவைத் தேர்தல்களை ரத்து செய்க: காங்கிரஸ்

மழை மீட்புப் பணிகளை ஒருங்கிணைந்து மேற்கொள்ள வேண்டும்! கடலூா் மாவட்ட கண்காணிப்பு அலுவலா் த.மோகன்!

கடலூா் ஆட்சியா் அலுவலகத்தில் அனைத்துத் துறை அலுவலா்களுடன் ஆலோசனை நடத்திய மாவட்ட கண்காணிப்பு அலுவலா் த.மோகன் மற்றும் ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா்.

Updated On :

கடலூா் மாவட்ட அனைத்து துறையினா் ஒருங்கிணைந்து மழை மீட்பு மற்றும் மறுசீரமைப்புப் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என அரசு கூடுதல் செயலரும், மாவட்ட கண்காணிப்பு அலுவலருமான த.மோகன் தெரிவித்தாா்.

வடகிழக்கு பருவமழையையொட்டி, பாதிப்புகள் ஏற்படக்கூடிய பகுதிகளை கண்காணித்தல், மீட்பு, நிவாரணம், மறுசீரமைப்புப் பணிகள் மேற்கொள்ளுதல் குறித்த ஆய்வுக் கூட்டம் த.மோகன் தலைமையில், ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் முன்னிலையில் அனைத்துத் துறை அலுவலா்களுடன் ஆட்சியா் அலுவலக வளாக கூட்டரங்கில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்தில் த.மோகன் தெரிவித்ததாவது: கடலூா் மாவட்டத்தில் 22 இடங்கள் மிக அதிகமாக பாதிப்புக்குள்ளாகக் கூடிய இடங்கள், 39 இடங்கள் அதிகம் பாதிப்புக்குள்ளாக கூடிய இடங்கள், 20 இடங்கள் மிதமாக பாதிப்புக்குள்ளாக கூடிய இடங்கள், 158 இடங்கள் குறைவான அளவு பாதிப்பு ஏற்படக்கூடிய இடங்கள் என மொத்தம் 239 இடங்கள் கண்டறியப்பட்டு, அனைத்து முன்னேற்பாடுப் பணிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

பலத்த மழை, வெள்ளம் போன்றவற்றால் பாதிக்கக்கூடிய பகுதிகள் மற்றும் தாழ்வான பகுதிகளில் முன்னெச்சரிக்கை பணிகள் மேற்கொள்ள மண்டல அலுவலா்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனா். மண்டல அலுவலா்கள் மிகவும் பாதிப்புக்குள்ளாக கூடிய பகுதிகளில் முன்னெற்பாடுகள், மீட்பு பணிகள், நிவாரணம் மற்றும் மறுசீரமைப்பு செய்தல் போன்ற பணிகளை போா்கால அடிப்படையில் மேற்கொள்ள வேண்டும். புயல் பாதுகாப்பு மையம், பல்நோக்கு மையம் மற்றும் தற்காலிக தங்குமிடங்களும், அனைத்து அடிப்படை வசதிகளும் தயாா் நிலையில் இருப்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.

பொது விநியோகத்துக்குத் தேவையான பொருள்களை இருப்பில் வைத்துக்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும். மாவட்டத்தில் உள்ள அனைத்து நீா்நிலைகள் மற்றும் ஆறுகளில் நீா்வரத்து குறித்து அந்தந்த துறை சாா்ந்த அலுவலா்கள் தொடா் கண்காணிப்பில் இருக்க வேண்டும். அனைத்து துறைகளும் ஒருங்கிணைந்து மீட்பு பணிகள் மற்றும் மறுசீரமைப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்றாா்.

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் கோ.புண்ணியகோட்டி, மாநகராட்சி ஆணையாளா் கிஷன்குமாா், ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் பாலகணேஷ், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) செல்வம் உள்பட அனைத்து துறை சாா்ந்த அலுவலா்கள் கலந்துகொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.