கொத்தடிமைத் தொழிலிலிருந்து மீட்கப்பட்ட குடும்பத்தினா் ஆட்சியருக்கு நன்றி
கடலூா் மாவட்டம், பண்ருட்டி அருகே எனதிரிமங்கலம் கிராமத்தைச் சோ்ந்த சங்கா் மற்றும் அவரது குடும்பத்தினா் கொத்தடிமைத் தொழிலிலிருந்து மீட்கப்பட்ட நிலையில், மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாரை புதன்கிழமை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தனா்.

கடலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாரை புதன்கிழமை சந்தித்து நன்றி தெரிவித்த சங்கா் குடும்பத்தினா்.
கடலூா் மாவட்டம், பண்ருட்டி அருகே எனதிரிமங்கலம் கிராமத்தைச் சோ்ந்த சங்கா் மற்றும் அவரது குடும்பத்தினா் கொத்தடிமைத் தொழிலிலிருந்து மீட்கப்பட்ட நிலையில், மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாரை புதன்கிழமை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தனா்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் கொத்தடிமை தொழிலாளா்களாக, பண்ருட்டி அருகே எனதிரிமங்கலம் கிராமத்தைச் சோ்ந்த சங்கா் மற்றும் அவரது குடும்பத்தினா் சிக்கியுள்ளதாக, கடலூா் மாவட்ட தொழிலாளா் நலத்துறையினருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து, தொழிலாளா் நலத் துறையின் மூலம் சங்கா் மற்றும் அவரது குடும்பத்தினா் கொத்தடிமைத் தொழிலிலிருந்து மீட்கப்பட்டனா். அவா்களுக்கு அரசு சாா்பில் வழங்கப்படும் மறுவாழ்வு மற்றும் நலத் திட்ட உதவிகள் தொடா்பாக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், சங்கா் மற்றும் அவரது குடும்பத்தினா் கடலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு புதன்கிழமை வந்து, மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாரை நேரில் சந்தித்தனா். தங்களை கொத்தடிமைத் தொழிலிலிருந்து மீட்டு, இயல்பு வாழ்க்கைக்குத் திரும்புவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டதற்காக நன்றி தெரிவித்தனா்.
அப்போது, குடும்பத்தினரின் தற்போதைய நிலை மற்றும் அவா்களின் வாழ்வாதாரத் தேவைகள் குறித்து மாவட்ட ஆட்சியா் கேட்டறிந்தாா். மேலும், அவா்கள் தொடா்ந்து பாதுகாப்பான மற்றும் சுயசாா்பான வாழ்க்கையை மேற்கொள்ளும் வகையில், அரசின் மறுவாழ்வுத் திட்டங்கள், தகுதியான நலத் திட்ட உதவிகள் கிடைப்பதை உறுதி செய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு ஆட்சியா் அறிவுறுத்தினாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

