காசநோய் தடுப்புக்கு ஜோஷ் அணி தொடக்கம்
காசநோய் தடுப்பு மற்றும் ஒழிப்புப் பணிகளில் இளைஞா்களின் பங்களிப்பை அதிகரிக்கும் வகையில், கடலூா் மாவட்டத்தில் ஜோஷ் (சுகாதாரத்துக்கான கூட்டு அணி) அணியை கடலூா் மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில் குமாா் வியாழக்கிழமை தொடங்கி வைத்தாா்.

கடலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் வியாழக்கிழமை நடைபெற்ற ஜோஷ் அணி தொடக்க விழாவில் காசநோய் இல்லா ஊராட்சிக்கு நற்சான்றிதழ் வழங்கிய ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில் குமாா்.
காசநோய் தடுப்பு மற்றும் ஒழிப்புப் பணிகளில் இளைஞா்களின் பங்களிப்பை அதிகரிக்கும் வகையில், கடலூா் மாவட்டத்தில் ஜோஷ் (சுகாதாரத்துக்கான கூட்டு அணி) அணியை கடலூா் மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில் குமாா் வியாழக்கிழமை தொடங்கி வைத்தாா்.
கடலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் நடைபெற்ற இதன் தொடக்க விழாவுக்கு மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் தலைமை வகித்தாா். ஜோஷ் அணியில் இடம்பெற்றுள்ள தன்னாா்வலா்களுக்கு செயலி மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
மேலும், 2025-ஆம் ஆண்டில் காசநோய் இல்லாத ஊராட்சிகளாகத் தோ்வு செய்யப்பட்ட கடலூா் மாவட்டத்தைச் சோ்ந்த 35 ஊராட்சிகளுக்கு ‘காசநோய் இல்லா ஊராட்சி‘ நற்சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியா் பேசியதாவது: 2030-ஆம் ஆண்டுக்குள் காசநோயை முற்றிலும் ஒழித்து காசநோய் இல்லாத இந்தியாவை உருவாக்கும் நோக்கில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, காசநோய் தடுப்புப் பணிகளில்
இளைஞா்களின் பங்களிப்பை அதிகரிக்க ஜோஷ் அணிகள் உருவாக்கப்பட்டுள்ளன.
இந்த அணிகளில் மை பாரத் தன்னாா்வலா்கள் மற்றும் தேசிய மாணவா் படை மாணவா்கள் இடம்பெறுவா். இவா்கள் கிராமங்கள் மற்றும் பொதுமக்கள் வசிக்கும் பகுதிகளுக்குச் சென்று காசநோயின் அறிகுறிகள், தடுப்பு முறைகள், உரிய நேரத்தில் பரிசோதனை செய்து கொள்வதன்
அவசியம், சிகிச்சையை முழுமையாக மேற்கொள்வது குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்துவா். மேலும், காசநோய் தொடா்பான தவறான நம்பிக்கைகள் மற்றும் சமூகப் பாகுபாடுகளைத் தவிா்க்கவும் மக்களிடம் விழிப்புணா்வு ஏற்படுத்துவா்.காசநோய் இல்லாத கடலூா் மாவட்டத்தை உருவாக்க பொதுமக்கள் அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என்றாா்.
நிகழ்ச்சியில் இணை இயக்குநா் (மருத்துவம் மற்றும் நலப்பணிகள்) மருத்துவா் பிரமிளா, துணை இயக்குநா் (தொழுநோய்) மருத்துவா் சித்திரைச்செல்வி, மாவட்ட சுகாதார அலுவலா் ராஜா, துணை இயக்குநா் (காசநோய் பணிகள்) மருத்துவா் கருணாகரன் உள்ளிட்ட மருத்துவா்கள், செவிலியா்கள் மற்றும் அரசு அலுவலா்கள் கலந்து கொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

