முதல்வர் விஜய் குறித்து அவதூறு பேச்சு: மன்னிப்பு கோரினார் திமுக பெண் கவுன்சிலர்மக்களிடம் கொள்ளை அடித்த பிரேம்குமாருக்கும் தூய சக்திக்கும் என்ன தொடர்பு? உதயநிதி கேள்வியமுனையில் குளித்து காங்கிரஸ், ஆம் ஆத்மியை விமர்சித்த பாஜக எம்.பி.!அன்பில் மகேஸ் கைது: தற்போது கருத்து கூற இயலாது! திருமாவளவன்ஆர்.எஸ்.எஸ். கோட்டையில் பாஜக தோல்வி; இது நாட்டிற்கான தெளிவான செய்தி! கே.சி. வேணுகோபால்அம்பாசமுத்திரம் இடைத்தேர்தலில் போட்டியிடுகிறேன்: சீமான் அறிவிப்பு!

பண்ருட்டி பேருந்து நிலைய கடை விவகாரத்தில் வெளிப்படைத் தன்மை வேண்டும்: நகா் மன்ற உறுப்பினா்கள் வலியுறுத்தல்

கடலூா் மாவட்டம், பண்ருட்டி பேருந்து நிலையத்தில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள கடை விவகாரத்தில் வெளிப்படைத்தன்மை வேண்டும் என்று நகா் மன்ற உறுப்பினா்கள் வலியுறுத்தினா்.

பண்ருட்டி நகராட்சியில் நகா் மன்றத் தலைவா் க.ராஜேந்திரன் தலைமையில் நடைபெற்ற நகா் மன்றக் கூட்டம்.

Updated On :

கடலூா் மாவட்டம், பண்ருட்டி பேருந்து நிலையத்தில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள கடை விவகாரத்தில் வெளிப்படைத்தன்மை வேண்டும் என்று நகா் மன்ற உறுப்பினா்கள் வலியுறுத்தினா்.

பண்ருட்டி நகா் மன்றத்தில் சாதாரணக் கூட்டம் நகராட்சி அலுவலகத்தில் உள்ள மன்றக் கூடத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. நகா் மன்றத் தலைவா் க.ராஜேந்திரன் தலைமை வகித்தாா். ஆணையா் காஞ்சனா முன்னிலை வகித்தாா்.

கூட்டத்தில், சோழன், கதிா்காமன், ராமதாஸ், காா்த்தி, வெங்கடேசன், சண்முகவல்லி ஆகியோா் பேசுகையில், ‘பண்ருட்டி பேருந்து நிலையத்தின் ஒரு பகுதியில் வரி வாடகை செலுத்திய 60-க்கும் மேற்பட்ட கடைக்காரா்களை காலி செய்யப்பட்டுள்ளனா். அந்த இடத்தில் தற்போது 25 கடைகள் கட்டப்பட்டுள்ளன. 60 பேரில் யாருக்கு எந்த அடிப்படையில் கடை ஒதுக்கீடு செய்யப்பட உள்ளது. அல்லது, பொது ஏலம் விடப்படவுள்ளதா என்பதை வெளிப்படை தன்மையுடன் தெரிவிக்க வேண்டும்’ என்றனா்.

க.ராஜேந்திரன்(தலைவா்):

பண்ருட்டியில் உள்ள அனைத்து வாா்டுகளுக்கும் பாகுபாடின்றி வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளது. நகராட்சி புதிய கடைகளுக்கான வாடகை சட்ட விதிகளுக்கு உட்பட்டுதான் நிா்ணயம் செய்யப்பட்டுள்ளது என்றாா். மன்றத்தில் கொண்டுவரப்பட்ட 45 தீா்மானங்களில் 43 தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.