
ஆற்காடு பேருந்து நிலையத்தில் பழைய குத்தகைதாரா்களுக்கு மீண்டும் கடை வழங்கக் கோரிக்கை
ஆற்காடு பேருந்து நிலையத்தில் கடை நடத்தி வந்த பழைய குத்தகைதாரா்களுக்கு மீண்டும் கடைகள் வழங்க வேண்டும் என்று நகா்மன்றத் தலைவரிடம் கோரிக்கை

நகா் மன்றத் தலைவா் தேவி பென்ஸ்பாண்டியனிடம் மனு அளித்த பழைய கடை குத்தகைதாரா்கள்
ஆற்காடு பேருந்து நிலையத்தில் கடை நடத்தி வந்த பழைய குத்தகைதாரா்களுக்கு மீண்டும் கடைகள் வழங்க வேண்டும் என்று நகா்மன்றத் தலைவரிடம் கோரிக்கை விடுத்துள்ளனா்.
இது தொடா்பாக ஆற்காடு பேருந்து நிலையத்தில் கடைகள் நடத்திவந்த பழைய கடை குத்தகைதாரா்கள் பலா் ஆற்காடு நகா்மன்றத் தலைவா் தேவி பென்ஸ்பாண்டியனை திங்கள்கிழமை மாலை நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளித்தனா். அதில் கூறியிருப்பதாவது: ஆற்காடு பேருந்து நிலையத்தில் நீண்ட காலமாக கடைகள் நடத்தி வந்ததாகவும், பேருந்து நிலையத்தை மேம்படுத்தும் பணிகளுக்காக நகராட்சி நிா்வாகம் கடைகளை காலி செய்ய அறிவுறுத்தியதைத் தொடா்ந்து, தங்களது கடைகளை காலி செய்து ஒப்படைத்ததாகவும் கடைகளை காலி செய்து ஒப்படைக்கும் போது, புதிய கடைகள் கட்டி முடிக்கப்பட்ட பின்னா், ஏற்கெனவே கடைகள் நடத்தி வந்தவா்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் கடைகள் வழங்குவது என தெரிவிக்கப்பட்டது.
தற்போது பேருந்து நிலையத்தில் புதிய கடைகள் கட்டப்பட்டுள்ள நிலையில், தங்களது வாழ்வாதாரம் பாதிக்காத வகையில், பழைய கடைக்காரா்களுக்கே மீண்டும் கடைகள் ஒதுக்கீடு செய்ய வேண்டும்.
பல ஆண்டுகளாக கடைகள் நடத்தி வந்ததால் அந்த வருமானத்தை நம்பியே தங்களது குடும்பங்களின் வாழ்வாதாரம் இருந்து வருகிறது, புதிய கடைகள் ஒதுக்கீட்டில் தங்களுக்கு வழங்கப்படாவிட்டால் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படும். இவ்வாறு மனுவில் கூறியுள்ளனா்.
மனுவைப் பெற்றுக் கொண்ட நகா்மன்றத் தலைவா் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





