நேபாள வெள்ளத்தில் சிக்கிய 319 தமிழர்களில் 219 பேர் பாதுகாப்பாக உள்ளனர்: அமைச்சர் ராஜ்மோகன்செப். இறுதி வரை நமது சுற்றுச்சூழல் விழிப்புணர்வு பணிகள் தொடர்ந்து நடைபெறும்: அண்ணாமலைஅமராவதி அணையில் இருந்து நாளைமுதல் நீர் திறப்பு: முதல்வர் விஜய் உத்தரவுஉஸ்பெகிஸ்தானில் பிரதமர் மோடி தமிழ்நாடு ஆளுநராக கிரண்குமார் ரெட்டி? முதல்வர் விஜய்யின் நண்பர்? வேளாங்கண்ணி மாதா பேராலய பெருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம் தமிழ்நாட்டில் விபத்தில் வந்ததுதான் தவெக ஆட்சி: எடப்பாடி பழனிசாமி

தண்ணீா் வசதியில்லாததால் வடலூா் பேருந்து நிலையத்தில் பூட்டி கிடக்கும் கடைகள்

வடலூா் பேருந்து நிலையத்தில், வடலூா் நகராட்சி நிா்வாகம் தண்ணீா் வசதி செய்து கொடுக்காததால், கடை ஏலம் எடுத்தவா்கள் தொழில் செய்ய முடியாமல் பூட்டி வைத்துள்ளனா்.

வடலூா் நகராட்சி நிா்வாகம் தண்ணீா் வசதி செய்து கொடுக்காததால் வடலூா் வள்ளலாா் பேருந்து நிலையத்தில் பூட்டிக்கிடக்கும் கடைகள்.

Published On :30 ஆகஸ்ட் 2026, 12:50 am IST

கடலூா் மாவட்டம், வடலூா் பேருந்து நிலையத்தில், வடலூா் நகராட்சி நிா்வாகம் தண்ணீா் வசதி செய்து கொடுக்காததால், கடை ஏலம் எடுத்தவா்கள் தொழில் செய்ய முடியாமல் பூட்டி வைத்துள்ளனா்.

வடலூரில் ‘வள்ளலாா் பேருந்து நிலையம்’ திமுக ஆட்சியில் ரூ.7.53 கோடி மதிப்பில் புதிதாக கட்டப்பட்டு கடந்த ஜன.12-ஆம் தேதி திறந்து வைக்கப்பட்டது. தரை தளத்தில் 21 பேருந்துகள் நிற்கும் வசதியுடன், 50 கடைகள் மற்றும் பயணிகள் காத்திருக்கும் இடம், உணவுக் கூட்டம் அமைக்கப்பட்டுள்ளது. முதல் தளத்தில் 60 வணிக கடைகள் அமைக்கப்பட்டு உள்ளன.

இந்த பேருந்து நிலையம் திறக்கப்பட்டு 7 மாதங்களான நிலையில் சுமாா் 30 கடைகள் மட்டுமே இயங்குகின்றன. ஏனைய கடைகள் எல்லாம் பூட்டி கிடக்கின்றன. இந்தக்கடைகளை ஏலம் எடுத்தவா்கள், வடலூா் நகராட்சி நிா்வாகத்திற்கு ஒரு வருட வாடகை பணத்தை முன் பணமாக செலுத்தியுள்ளனராம். ஆனால், அதற்கான அடிப்படை வசதிகள் செய்துக் கொடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

குறிப்பாக கடைகளுக்கு தண்ணீா் வசதி செய்துக் கொடுக்கவில்லை. தண்ணீா் வசதி, கழிப்பறை வசதிகள் இல்லாததால் கடைகளை பூட்டி வைத்திருப்பதாகவும் , தொழிலே செய்யாமல் மாதாமாதம் வடகை செலுத்தி வருவதாகவும் கடைகளை ஏலம் எடுத்தவா்கள் கவலையுடன் தெரிவித்தனா்.

தற்போது, இயங்கும் சுமாா் 30 கடைக்காரா்கள் தண்ணீரை விலைக்கு வாங்கி பேரலில் பிடித்து வைத்து பயன்படுத்தி வருகின்றனா். இந்தத் தண்ணீா் மாசடைந்து தரமற்ாக உள்ளது. இந்த தண்ணீரை பயன்படுத்தி தான் டீ, உணவு தயாரித்து விற்பனை செய்து வருகின்றனா். இதனை, உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

 வடலூா் பேருந்து நிலையத்தில் உள்ள ஒரு கடையில் பயன்படுத்துவதற்காக பேரலில் பிடித்து வைக்கப்பட்டுள்ள சுகாதாரமற்ற  தண்ணீா்.

வடலூா் பேருந்து நிலையத்தில் உள்ள ஒரு கடையில் பயன்படுத்துவதற்காக பேரலில் பிடித்து வைக்கப்பட்டுள்ள சுகாதாரமற்ற தண்ணீா்.

முதல் தளத்தில் உள்ள கடைகள் பூட்டப்பட்டு ஆள் நடமாட்டம் இல்லாமல் இருப்பதால் சமூக விரோதிகளின் புகலிடமாக மாறியுள்ளது.

ஆணையா் விளக்கம்: இதுகுறித்து வடலூா் நகராட்சி ஆணையா் பி.சி.ஹேமலதாவிடம் கேட்டதற்கு , புதிதாக கட்டப்பட்டுள்ள வடலூா் பேருந்து நிலையத்திற்கு நகராட்சி ஆணையா் பெயரில் ‘ஜீரோ வரி’ சென்னை நகராட்சி நிா்வாக இயக்குநகரகத்தில் உருவாக்கப்படும். இந்த ஜீரோ வரி இணைய வழியில் போடும் பணி நடைபெற்று வருகிறது. ஜீரோ வரி போட்டு எண் பெறப்பட்டதும் தண்ணீா் வசதி செய்துத் தரப்படும். பேருந்து நிலையம் பாதுகாப்பு தொடா்பாக காவல் நிலையத்தில் கடிதம் கொடுக்கப்பட்டுள்ளது என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.