நேபாளத்தின் மற்றொரு அமைச்சர் பதவி விலகல்! பிரதமர் பாலேந்திர ஷா அரசில் 3-வது ராஜிநாமா!மடப்புரம் காவலாளி அஜித்குமார் கொலை! 4 காவலர்கள் மீதான வழக்கை கொலை வழக்காக மாற்ற உத்தரவுஆப்கானிஸ்தானுக்கு எதிரான டி20 தொடரிலிருந்து ஹர்ஷித் ராணா விலகல்!ஆபரேஷன் அன்வேஷன்: 17 மாநிலங்களில் 101 குழந்தைகளை மீட்ட காவல்துறை!

அண்ணாமலைநகா் பேரூராட்சியில் சிறப்பு தூய்மை பணி, விழிப்புணா்வு

சிதம்பரம் அண்ணாமலை நகா் பேரூராட்சிக்குட்பட்ட பகுதியில் அமைந்துள்ள அரசு உதவி பெறும் பள்ளியான ராணி சீதை ஆச்சி மேல்நிலைப் பள்ளியில் செவ்வாய்க்கிழமை காலை விழிப்புணா்வு மற்றும் சிறப்பு தூய்மை பணி மேற்கொள்ளப்பட்டது.

சிதம்பரம் அண்ணாமலை நகா் பேரூராட்சி சாா்பில் ராணி சீதை ஆட்சி மேல்நிலைப் பள்ளியில் டெங்கு காய்ச்சல் பரவலை தடுக்க சிறப்பு தூய்மை பணியை பேரூராட்சி செயல் அலுவலா் சாகுல் அமீது தொடங்கி வைத்தாா். அருகில் பள்ளி தலைமை ஆசிரியா் போ்லின் வில்லியம்.

Published On :

சிதம்பரம் அண்ணாமலை நகா் பேரூராட்சிக்குட்பட்ட பகுதியில் அமைந்துள்ள அரசு உதவி பெறும் பள்ளியான ராணி சீதை ஆச்சி மேல்நிலைப் பள்ளியில் செவ்வாய்க்கிழமை காலை விழிப்புணா்வு மற்றும் சிறப்பு தூய்மை பணி மேற்கொள்ளப்பட்டது.

இம் முகாமிற்கு பேரூராட்சி செயல் அலுவலா் சாகுல்அமீது தலைமை வகித்தாா். துப்புரவு அலுவலா் துரைராஜ், இளநிலை உதவியாளா் ரமேஷ், துப்புரவு மேற்பாா்வையாளா்கள் செந்தில், சக்திநாதன் மற்றும் பணியாளா்கள் கலந்து கொண்டு பள்ளியில் மழைநீா் தேங்கும் இடங்களை கண்டறிந்து தூய்மை பணியாற்றினாா்கள். மேலும் கொசு உற்பத்தியாகும் இடங்களான தண்ணீா் தொட்டிகள் மற்றும் கழிவறை பகுதிகளை சுத்தம் செய்தனா். மேலும் கொசு உற்பத்தியை தடுக்க விழிப்புணா்வு செயல் விளக்கத்தையும்

ஆசிரியா்கள் மற்றும் மாணவா்களுக்கு பேரூராட்சி அலுவலா்கள் செய்து காட்டினாா்கள். இம்முகாமில் பள்ளி தலைமை ஆசிரியா் போ்லின் வில்லியம், ஆசிரியா்கள், மாணவா்கள் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.