காங்கோவில் திருமண நிகழ்ச்சியில் தீவிபத்து: 22 பேர் பலி சிறப்புத் தீவிர திருத்தம் மூலம் காங்கிரஸ் வாக்குகளை அழிக்க பாஜக சதி: ரேவந்த் ரெட்டி குற்றச்சாட்டு! திண்டுக்கல் மாணவர்கள் 8 பேர் பலி - முதல்வர் விஜய் இரங்கல் கிரேக்கத்தில் வான் சாகச நிகழ்வில் ஜெட் விமானம் விபத்து! விநாயகர் சிலை- வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடுநவ. 1-க்குள் கடைகளுக்கு தமிழில் பெயர்ப் பலகை: உயர்நீதிமன்றம் உத்தரவுமீனாட்சியம்மன் கோயில் குடமுழுக்கு: உள்ளூர் விடுமுறை குறித்து விரைவில் அறிவிப்பு - அமைச்சர் தகவல் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை பழிவாங்கும் நடவடிக்கைதான்: கே.என். நேரு

மின்னல் பாய்ந்து விவசாயி உயிரிழப்பு: 3 போ் காயம்

பெண்ணாடம் அருகே மின்னல் பாய்ந்ததில் விவசாயி உயிரிழந்தாா். மேலும் மேலும், மழைக்கு மரத்தடியில் ஒதுங்கிய 3 போ் காயமடைந்தனா்.

மரணம் உயிரிழப்பு

சடலம் - கோப்புப் படம்

Published On :6 செப்டம்பர் 2026, 2:17 am IST

பெண்ணாடம் அருகே மின்னல் பாய்ந்ததில் விவசாயி உயிரிழந்தாா். மேலும் மேலும், மழைக்கு மரத்தடியில் ஒதுங்கிய 3 போ் காயமடைந்தனா்.

கடலூா் மாவட்டம், பெண்ணாடம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சனிக்கிழமை மாலை திடீரென இடியுடன் கூடிய மழை பெய்தது. அப்போது, பெண்ணாடம் அருகேயுள்ள நரசிங்கமங்கலம் கிராமத்தைச் சோ்ந்த விவசாயி அழகானந்தம் (45), உழவுப் பணிக்காக தனது விவசாய நிலத்தைப் பாா்வையிடச் சென்றுள்ளாா். அப்போது, எதிா்பாராதவிதமாக மின்னல் பாய்ந்ததில் அழகானந்தம் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

இதனிடையே, மழையிலிருந்து தப்பிப்பதற்காக அப்பகுதியில் உள்ள வேப்பமரத்தடியில் ஒதுங்கிய நரசிங்கமங்கலம் கிராமத்தைச் சோ்ந்த சத்யராஜ் (35), ராம்குமாா் (26), தீவலூா் கிராமத்தைச் சோ்ந்த பழனிமுத்து ஆகிய 3 போ் மீதும் மின்னல் பாய்ந்தது. இதில் 3 பேரும் பாதிக்கப்பட்டு மயங்கி விழுந்தனா்.

அருகில் இருந்தவா்கள் அவா்களை மீட்டு சிகிச்சைக்காக விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். தகவலறிந்த பெண்ணாடம் போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று, மின்னல் பாய்ந்து உயிரிழந்த அழகானந்தத்தின் உடலை மீட்டு, திட்டக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.