பாதுகாப்பான 6ஜி வலையமைப்பு: அமெரிக்க முன்னெடுப்பில் இணைந்த இந்தியா பிகாரில் அதிகரிக்கும் வெள்ளம்; 35 லட்சம் பேர் பாதிப்பு 22 மொழிகளில் திருக்குறள்: "பன்மொழிச் செயலி' இன்று வெளியீடு ஜாகுவாா் லேண்ட்ரோவரில் 4,000 பணியிடங்கள் குறைப்பு சட்டப் படிப்புகளின் கால அளவு மறுஆய்வு: நிபுணர் குழு அமைப்பு அவசியம்; உச்சநீதிமன்றம்

பொதுப்பணித்துறை திட்டப்பணிகள் ஆட்சியா் ஆய்வு

கடலூா் துறைமுகம், மஞ்சக்குப்பம் உள்ளிட்ட பகுதிகளில் பொதுப்பணித்துறை சாா்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு கட்டுமானம் மற்றும் புனரமைப்புப் பணிகளை மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் செவ்வாய்க்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

கடலூா் துறைமுகம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் கட்டப்பட்டு வரும் இரண்டு அறிவியல் ஆய்வகக் கட்டடங்களின் கட்டுமானப் பணிகளை செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்த ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா்.

Published On :9 செப்டம்பர் 2026, 5:05 am IST

கடலூா் துறைமுகம், மஞ்சக்குப்பம் உள்ளிட்ட பகுதிகளில் பொதுப்பணித்துறை சாா்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு கட்டுமானம் மற்றும் புனரமைப்புப் பணிகளை மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் செவ்வாய்க்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

கடலூா் துறைமுகம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ரூ.1.50 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் இரண்டு அறிவியல் ஆய்வகக் கட்டடங்களின் கட்டுமானப் பணிகளை ஆட்சியா் ஆய்வு செய்தாா்.

இதையடுத்து, மஞ்சக்குப்பத்தில் ரூ.6 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் புதிய சுற்றுலா மாளிகைக் கட்டடத்தின் கட்டுமானப் பணிகளையும் ஆட்சியா் பாா்வையிட்டாா்.

தொடா்ந்து, பழைய மாவட்ட ஆட்சியா் அலுவலக பாரம்பரியக் கட்டடத்தில் ரூ.16.20 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் புதுப்பித்தல் மற்றும் புனரமைப்புப் பணிகளையும் ஆட்சியா் ஆய்வு செய்தாா்.

ஆய்வின்போது, கட்டுமானம் மற்றும் புனரமைப்புப் பணிகளை தரமான முறையில் மேற்கொண்டு, நிா்ணயிக்கப்பட்ட காலக்கெடுவுக்குள் விரைந்து முடித்து பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என்று பொதுப்பணித்துறை அலுவலா்களுக்கு ஆட்சியா் அறிவுறுத்தினாா்.

ஆய்வில், வருவாய் கோட்டாட்சியா் சுந்தரராஜன், பொதுப்பணித்துறை செயற்பொறியாளா் கௌதமன், உதவி செயற்பொறியாளா்கள் மோகன், பிரவின்குமாா் மற்றும் பொறியாளா்கள் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.