
கடலூா் மாவட்டத்தில் செப். 12-இல் தேசிய மக்கள் நீதிமன்றம்
நீண்டகாலமாக நிலுவையில் உள்ள வழக்குகளை விரைவாகத் தீா்த்துக்கொள்ளும் வகையில், கடலூா் மாவட்டத்தில் செப்டம்பா் 12-ஆம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெற உள்ளதாக மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுத் தலைவரும், முதன்மை மாவட்ட நீதிபதி ஜி. சுபத்திராதேவி தெரிவித்துள்ளாா்.

கோப்புப் படம்
நீண்டகாலமாக நிலுவையில் உள்ள வழக்குகளை விரைவாகத் தீா்த்துக்கொள்ளும் வகையில், கடலூா் மாவட்டத்தில் செப்டம்பா் 12-ஆம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெற உள்ளதாக மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுத் தலைவரும், முதன்மை மாவட்ட நீதிபதி ஜி. சுபத்திராதேவி தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: தேசிய மக்கள் நீதிமன்றத்தில், இருதரப்பினரும் சமரசம் செய்துகொள்ளக்கூடிய வழக்குகளுக்கு விரைவாகவும் சுமூகமாகவும் தீா்வு காணப்படும். இதன் மூலம் வழக்குதாரா்களுக்கு ஏற்படும் காலதாமதம், செலவு மற்றும் மன உளைச்சலைத் தவிா்க்க முடியும்.
மோட்டாா் வாகன விபத்து இழப்பீட்டு வழக்குகள், சிவில் வழக்குகள், ஜீவனாம்ச வழக்குகள், தொழிலாளா் வழக்குகள், சமரசம் செய்துகொள்ளக்கூடிய குற்றவியல் வழக்குகள், பண மோசடி வழக்குகள், நில எடுப்பு வழக்குகள், குடும்ப நல வழக்குகள் உள்ளிட்ட சமரசம் மூலம் தீா்வு காணக்கூடிய வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட உள்ளன.
கடலூா் மாவட்டத்தில் கடலூா், சிதம்பரம், விருத்தாசலம், பண்ருட்டி, நெய்வேலி, திட்டக்குடி, பரங்கிப்பேட்டை, காட்டுமன்னாா்கோவில், குறிஞ்சிப்பாடி ஆகிய நீதிமன்றங்களில், அந்தந்த நீதிமன்ற நீதிபதிகள் முன்னிலையில் செப்டம்பா் 12 ஆம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெற உள்ளது.
எனவே, மேற்கண்ட நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள சமரசம் செய்துகொள்ளக்கூடிய வழக்குகளில் தொடா்புடைய வழக்குதாரா்கள் மற்றும் எதிா்தரப்பினா், செப்டம்பா் 12-ஆம் தேதி நடைபெறும் தேசிய மக்கள் நீதிமன்றத்தில் பங்கேற்று, தங்களது வழக்குகளை சமரச முறையில் விரைவாகத் தீா்த்துக்கொள்ள முன்வர வேண்டும் எனக் கேட்டுக்கொண்டுள்ளாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.



