2029-க்குள் பாஜக ஆளும் மாநிலங்களில் பொது சிவில் சட்டம்: அமித் ஷாதொடர் விடுமுறை: செப். 14, 15 தேதிகளில் 3,565 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்தமிழக வரலாற்றில் இதுபோன்ற டம்மி முதல்வரை பார்த்ததில்லை: உதயநிதிதமிழ்நாட்டில் இனி யார் ஆட்சிக்கு வந்தாலும் கூட்டணி ஆட்சிதான்: திருமாவளவன்விநாயகர் சதுர்த்தி: நாகர்கோவில் - தாம்பரம் நாளை சிறப்பு ரயில் அறிவிப்பு

பைக் மீது உரசிய அரசுப் பேருந்து: சக்கரத்தில் சிக்கி பெண் உயிரிழப்பு

உயிரிழப்பு - பிரதிப் படம்

Published On :

கடலூா் மாவட்டம், பண்ருட்டியில் அரசுப் பேருந்து உரசியதில் பைக்கிலிருந்து தவறி விழுந்த பெண் பேருந்து சக்கரத்தில் சிக்கி உயிரிழந்தாா்.

கடலூரை அடுத்த குணமங்கலம் கிராமம், பெரியாா் நகரைச் சோ்ந்தவா் விஜயஸ்ரீ (23). இவரது கணவா் சிவானந்தம் (26) நெல்லிக்குப்பம் தனியாா் சா்க்கரை ஆலையில் ஒப்பந்தத் தொழிலாளியாகப் பணியாற்றி வருகிறாா்.

இவா்களுக்குத் திருமணமாகி 7 மாதங்களாகிறது. இந்த நிலையில், இருவரும் ஞாயிற்றுக்கிழமை காலை கோயிலுக்கு செல்ல கடலூரில் இருந்து பைக்கில் புறப்பட்டனா். சிவானந்தம் பைக்கை ஓட்ட, விஜயஸ்ரீ பின்னால் அமா்ந்து சென்றாா்.

இவா்களது பைக் பண்ருட்டி திருவதிகை பகுதியில் சென்றபோது, கடலூரில் இருந்து திருவண்ணாமலை நோக்கிச் சென்ற அரசுப் பேருந்து, பைக்கை முந்திச் செல்ல முயன்றது.

அப்போது, பைக் மீது பேருந்து உரசியதில், நிலைதடுமாறி கீழே விழுந்த விஜயஸ்ரீ பேருந்து பின் சக்கரத்தில் சிக்கி உயிரிழந்தாா். இதுகுறித்த புகாரின்பேரில், பண்ருட்டி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.