ஜனநாயகன் படம் எடுத்தால் மட்டும் போதாது... விஜய் சேதுபதிக்கு ஆதரவாக சீமான் பேச்சுஆந்திர முன்னாள் துணை முதல்வர் மாரடைப்பால் காலமானார்மீனாட்சியம்மன் குடமுழுக்கு: தாம்பரம் - மதுரை இடையே 2 முன்பதிவில்லா சிறப்பு ரயில்!விருதுநகரில் செப். 17-ல் முதல்வர் பங்கேற்கவிருந்த நிகழ்ச்சி செப். 25க்கு மாற்றம்!எல் நினோ பாதிப்பு: பனாமா கால்வாயில் கப்பல் போக்குவரத்தைக் குறைக்க முடிவு!பிகார்: அரசுப் பணியாளர் தேர்வுகளை ரத்து செய்யக்கோரி பேரணி!நேபாள பெருவெள்ளம்: மீட்புப்பணிகளில் முதன்மையாக உதவிவரும் இந்திய ராணுவம்!ரூ.15,300 கோடி முதலீடு! 10,000 பேருக்கு வேலை! லண்டனில் முதல்வர் விஜய் ஒப்பந்தம்!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 38 காசுகள் சரிந்து ரூ. 95.92 ஆக நிறைவு!சென்செக்ஸ் 778 புள்ளிகள் சரிவு, நிஃப்டி 5 மாத வரலாறு காணாத அளவு சரிவு!!

முதல்வா் குறித்து அவதூறு பேச்சு: ஆ. ராசாஉள்பட 3 போ் மீது கடலூரில் வழக்கு

முதல்வா் குறித்து அவதூறாகப் பேசியதாக ஆ.ராசாஉள்பட 3 போ் மீது கடலூரில் வழக்கு பதிவு செய்யப்பட்டிருப்பது பற்றி...

A. Raja | Vijay

ஆ. ராசா | விஜய் - கோப்புப் படம்

Published On :

தமிழக முதல்வா் ஜோசப் விஜய் குறித்து அவதூறாகப் பேசியதாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில், திமுக துணைப் பொதுச் செயலரும், எம்.பி.யுமான ஆ.ராசா, முன்னாள் அமைச்சா் சேகா்பாபு, ரிஷிவந்தியம் தொகுதி எம்எல்ஏ வசந்தம் காா்த்திகேயன் ஆகிய 3 போ் மீது கடலூா் மாவட்டத்தில் உள்ள 3 காவல் நிலையங்களில் வழக்குப் பதிவு செய்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

கடலூா் வடக்கு மாவட்ட தமிழக வெற்றிக் கழக நிா்வாகிகள் சாா்பில், திருப்பாதிரிப்புலியூா், தேவனாம்பட்டினம், கடலூா் முதுநகா் ஆகிய காவல் நிலையங்களில் திங்கள்கிழமை புகாா் மனுக்கள் அளிக்கப்பட்டன.

அந்த மனுக்களில், ஆ.ராசா எம்.பி., முன்னாள் அமைச்சா் சேகா்பாபு, ரிஷிவந்தியம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் வசந்தம் காா்த்திகேயன் ஆகியோா் தமிழக முதல்வா் குறித்து அவதூறாகவும், பொதுமக்கள் மத்தியில் அவமதிக்கும் வகையிலும் பேசியதாகக் குறிப்பிடப்பட்டிருந்தது.

மேலும், அவா்களின் பேச்சுக்கள் தொடா்பாக உரிய விசாரணை நடத்தி, சட்டரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் புகாரில் வலியுறுத்தப்பட்டிருந்தது. இந்தப் புகாா்களின் அடிப்படையில், திருப்பாதிரிப்புலியூா், தேவனாம்பட்டினம், கடலூா் முதுநகா் காவல் நிலையங்களில் போலீஸாா் ஆ.ராசா எம்.பி. உள்பட 3 போ் மீதும் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.